News April 10, 2024

இந்திய வம்சாவளி மாணவர்கள் மரணம்! பின்னணி என்ன?

image

அமெரிக்காவில் நடப்பு ஆண்டு இந்திய வம்சாவளி மாணவர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அனைவரும் 25 வயதிற்குட்பட்டவர்கள். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், துப்பாக்கிச்சூடு, கடத்தல், தற்கொலை உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய காரணங்கள் இறப்புகளுக்கான பின்னணியாக இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இனவெறியை மாணவர்களின் மரணங்களுக்கான காரணமாக கருத முடியாது எனக் கூறப்படுகிறது.

News April 10, 2024

அனில் அம்பானிக்கு ரூ.8,000 கோடி தர வேண்டாம்

image

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு ரூ.8,000 கோடி இழப்பீடு தர வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, ஒப்பந்தத்தை மீறியதற்காக ரூ.8,000 கோடி இழப்பீடு வழங்க டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் ஒரே நாளில் 20% சரிவை சந்தித்துள்ளன.

News April 10, 2024

ஜனநாயக நாட்டில் எதுவும் செய்ய முடியாது

image

பரந்தூர் மக்களிடம் காஞ்சிபுரம் தேர்தல் அதிகாரி பேச்சு நடத்துவார் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார். பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காக நிலம் எடுக்கப்படுவதை எதிர்த்து போராடும் மக்கள், அதன் ஒருபகுதியாக மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவை கைவிட மக்களிடம் பேசுவோம் எனக் கூறிய சாகு, அதன் பிறகும் தேர்தலை புறக்கணித்தால் ஜனநாயக நாட்டில் எதுவும் செய்ய முடியாது எனக் கூறினார்.

News April 10, 2024

ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதை

image

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரும் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பருமாகிய ஆர்.எம்.வீ நேற்று சென்னையில் காலமானார். முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், அரசு மரியாதை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.

News April 10, 2024

நான் அனைவருக்கும் மேல்தான்: இளையராஜா

image

இளையராஜாவின் 4500க்கும் அதிகமான பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனம் வைத்திருக்கிறது. அதற்கான ராயல்டியை அந்நிறுவனம் வழங்குவதில்லை என்று ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார் இளையராஜா. அதன் விசாரணையின்போது, “தன்னை அனைவருக்கும் மேல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா” என்று எக்கோ நிறுவன வழக்கறிஞர் கூறினார். அதற்கு இளையராஜாவின் வழக்கறிஞர், “ஆம். நான் எல்லோருக்கும் மேல்தான்” என்று பதிலளித்தார்.

News April 10, 2024

CSK அணியுடன் விரைவில் இணையும் கான்வே

image

ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மே மாத தொடக்கத்தில் அவர் சிஎஸ்கே அணியில் இணைவார் என வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். மே மாதம் IPL பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது.

News April 10, 2024

பெரு நிறுவனங்கள் நோக்கி நகரும் முதலீட்டாளர்கள்

image

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மார்ச் மாதம் 16% சரிந்து ரூ.22,633 கோடியாக இருந்துள்ளது. குறிப்பாக, மிட்கேப் ஃபண்டுகளின் முதலீடு 44% சரிந்து ரூ.1,018 கோடியாக இருந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் ரூ.1,808 கோடியாக இருந்தது. அதே நேரம், லார்ஜ் கேப் ஃபண்டுகளின் முதலீடு 131% அதிகரித்து ரூ.2,128 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 2% சரிந்து ரூ.53.12 லட்சம் கோடியாக உள்ளது.

News April 10, 2024

கெஜ்ரிவால் வழக்கில் ரூ.50,000 அபராதம்

image

அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி வழக்கு தொடர்ந்த ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் எப்போதாவது முதல்வர்களை பதவி நீக்கம் செய்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், முதல்வர் பதவியில் தொடர்வது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றனர்.

News April 10, 2024

தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய கஞ்சா கருப்பு

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடிகர் கஞ்சா கருப்பு தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் நேர்த்திக் கடன்களை செலுத்தியதாகக் கூறிய அவர், இபிஎஸ் ஒரு விவசாயி என்பதால் அவருக்கு தான் விவசாயிகள் படும் துயரங்கள் தெரியும் எனத் தெரிவித்தார்.

News April 10, 2024

மாருதி கார்கள் விலை திடீர் உயர்வு

image

ஸ்விப்ட், கிராண்ட் விடாரா மாடல் கார்கள் விலையை மாருதி சுசூகி நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனமாக மாருதி சுசூகி திகழ்கிறது. அந்நிறுவனம் ஸ்விப்ட் மாடல் கார்கள் விலையை இன்று முதல் ₹25,000 உயர்த்தியுள்ளது. கிராண்ட் விடாரா மாடல் கார்கள் விலையை ₹19,000 உயர்த்தியுள்ளது.

error: Content is protected !!