India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் (மாதம் ரூ.8,500) வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நீங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தால் உங்களுக்கும் இந்தப் பணம் கிடைக்கும். தட்டுத் தடுமாறி வரும் மக்களை முன்னேற்றுவோம். ஒரே அடியில் இந்தியாவில் இருந்து வறுமையை ஒழிப்போம் எனக் கூறியுள்ளார்.
நாகையில் பாஜகவினர் பிரசாரத்தின் போது வைத்த பட்டாசு வெடியால் குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை கோட்டாச்சியர் அலுவலகம் அருகே பிரசாரம் செய்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்று, பாஜகவினர் பட்டாசுகளை வெடித்தனர். அப்போது பரவிய தீயால், அருகில் இருந்த 2 குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து நாசமாயின. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர்கள் ஜேக்ஸ் மற்றும் லாக்கி ஃபெர்குசன் களமிறக்கப்படுவார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் லாக்கி ஃபெர்குசன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவரைத் தொடர்ந்து, கடந்த 2 வருடங்களாக T20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த வில் ஜேக்ஸையும் RCB அணி பயன்படுத்தாமலே வைத்துள்ளது.
காஃபியை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு பயன்கள் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 2 முதல் 5 கப் வரை காஃபி குடிப்பது இறப்பு அபாயத்தைக் குறைக்கும். நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் காஃபி பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம், சுமார் 12 கப் காஃபியை உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாள்களே இருக்கும் நிலையில் தேசியத் தலைவர்கள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை தமிழகம் வர இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடுத்தடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
இன்றைய ரம்ஜான் பொது விடுமுறையைத் தொடர்ந்து அடுத்த விடுமுறை எப்போது என்ற கேள்வி மக்களின் மனதில் எழத் தொடங்கியிருக்கிறது. உங்களுக்காகவே வருகிறது ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு பொது விடுமுறை. அன்றைய தினம் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட எதுவும் செயல்படாது. அதனையடுத்து மே 1ஆம் தேதி உழைப்பாளர் தின விடுமுறை அளிக்கப்படவுள்ளது. ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கள நிலவரத்தை நேரில் அலசி வருகிறார். முதற்கட்டமாக கொங்கு மண்டலத்தில் முகாமிட்டுள்ள அவர், தேர்தல் வேலைகள், கூட்டணி கட்சிகளுக்குள் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறாராம். தொடர்ந்து பிற பகுதிகளுக்கும் சென்று கள நிலவரத்தை சபரீசன் நேரில் ஆராய திட்டமிட்டுள்ளார்.
சீனாவில் அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை, ஓய்வூதியப் பங்கீடு அந்நாட்டின் வளர்ச்சியை அச்சுறுத்தும் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையால், இப்போது அங்கு ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். இது எதிர்காலத்தில், உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீனாவின் மனித வளச் சமநிலையை சீர்குலைத்து அச்சுறுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
பாஜக தலைவர்கள் வடமாநிலங்களில் பிரமாண்ட வாகனப் பேரணி நடத்துவது போல தமிழகத்திலும் பேரணி நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோரின் நடை பயணம், பொதுக் கூட்டங்களை மட்டுமே பார்த்துள்ளது. பாஜகவினரின் வாகன பேரணியை இப்போது தான் பார்க்கிறது. இந்தப் பேரணி, பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத் தருமா எனத் தேர்தல் முடிவே தீர்மானிக்கும்.
தென்கிழக்கு மத்திய ரயில்வே 733 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 12) கடைசி நாளாகும். இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இணையதளம்: <
Sorry, no posts matched your criteria.