India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஏப்ரல் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
➤ தமிழகத்தில் ரூ.303 கோடி பறிமுதல்
➤ உதயநிதியின் முதல்வர் கனவு பலிக்காது – இபிஎஸ்
➤ தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும் – ஜெயக்குமார்
➤ ‘பொன் ஒன்று கண்டேன்’ ட்ரெய்லர் வெளியானது
➤ ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா
இந்தியாவில் உள்ள ஐஃபோன்களில் உளவு பார்க்கும் மென்பொருள் இருக்கக் கூடும் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த மென்பொருள் பெகாஸஸ் மென்பொருளை விட சக்தி வாய்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளின் ஐஃபோன் பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
ஒடிசாவின் ரூர்கேலாவை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், ட்ரெட்மில்லில் 12 மணி நேரம் நிற்காமல் தொடர்ந்து ஓடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். புதிய சாதனையை படைத்த சுமித் குமார் சிங், கடந்த மார்ச் 12ஆம் தேதி காலை 8.15 மணிக்கு தொடங்கி, இரவு 8.20 மணி வரை, தொடர்ச்சியாக 68.04 கி.மீ அளவுக்கு ஓடியுள்ளார். இதுவரை 33 மாரத்தான்களில் பங்கேற்றுள்ள சுமித், 1,392 கி.மீ தொலைவை கடந்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு 196/8 ரன்கள் எடுத்தது. டு ப்ளஸி 61, படிதார் 50 ரன்கள் அடித்தனர். 197 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய மும்பை ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இஷான் கிஷன் 69, சூர்ய குமார் யாதவ் 52 , ரோகித் 38 ரன்கள் எடுத்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மும்பை சிறப்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தியது.
10ஆவது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக சென்னையின் எஃப்.சி நேற்று முன்னேறியது. இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில், ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மோகன் பகான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கடைசி வரை கோல் எதுவும் அடிக்காமல் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
திருச்சியில் செயல்பட்டு வரும் IIM இல் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 12) கடைசி நாளாகும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக அனுபவம், வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக எந்த வருத்தமும் இல்லையென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து பேசிய அவர், “தேர்தல் பத்திர திட்டத்தின் நன்மைகள் குறித்து காலமே தீர்மானிக்கும். நாங்கள் நீதிமன்றத்துக்கு எதிரானவர்கள் அல்ல. உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
வரும் மே 1 முதல் ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையை நிறுத்தப் போவதாக சில்லறை விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லாப பகிர்வு, கிளைம் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் தொடர்வதால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 23 ரீடெய்ல் விற்பனை நிலையங்கள், 4,500 கடைகளில் ஒன் பிளஸ் விற்பனை நடைபெறாதென அறிவித்துள்ளனர்.
ஏப்ரல் 7ஆம் தேதி சனி பகவான் குருவின் நட்சத்திரமாகிய பூரட்டாதியில் நுழைந்தார். இந்த நகர்வு அனைத்து ராசியிலுமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதீத பலனை அனுபவிக்கப் போகின்றனர். அதன்படி, மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய மூன்று ராசிகளும் பணமழையில் நனைய இருப்பதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். தொழிலில் லாபம், பணியிடங்களில் சம்பள உயர்வு, வியாபார பெருக்கம் ஆகியவை ஏற்படும்.
Sorry, no posts matched your criteria.