India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த குரோதி வருட புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என அந்த வாழ்த்து அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். பேருந்தில் இருந்த 9 பேரை கடத்தி சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அதே போல, சாலையில் சென்ற கார் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புளிப்பாக்கப்பட்ட பாலைதான் ‘யோகர்ட்’ என சொல்கிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. இது தயிரை விட அதிக ஊட்டச்சத்துகள் கொண்டது. தயிரை வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆனால், யோகர்ட் தயாரிக்க உயிருள்ள பாக்டீரியாக்கள் தேவை என்பதால், தொழிற்சாலைகளில் மட்டுமே தயாரிக்க முடியும்.
ஆட்சியில் இருந்தபோது மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர, காங்கிரஸ் வேறு என்ன செய்தது என்று கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சிக்கு வந்தால் ஹிமாச்சல் பெண்களுக்கு ₹1,500 தருவோம், 5 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என காங்கிரஸ் பொய் வாக்குறுதி அளிப்பதாக குற்றம்சாட்டினார். பொய் வாக்குறுதி அளித்து மக்களை இழுப்பதை எப்போது அக்கட்சி கைவிடும் என்றும் அவர் வினவினார்.
வாட்ஸ் அப் லிங்க் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என பாஜக மோசடி செய்வதாக நெல்லை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு வாக்களித்தால் வாட்ஸ்அப் லிங்க் மூலம் ₹500 கிடைக்கும் என குறுஞ்செய்தி அனுப்புவதாக குற்றம்சாட்டிய திமுக, இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளது.
வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என ‘தி ஹிந்து’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக வேண்டும் என 48% பேரும், ராகுல் பிரதமராக வேண்டும் என 27% பேரும் வாக்களித்துள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக பலர் வாக்களித்திருந்தாலும், பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக 32% பேர் தெரிவித்துள்ளனர்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கப்படும் என RJD கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ள RJD தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அக்னிவீர் திட்டம் நிறுத்தப்படும், பீகார் மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், சிலிண்டர் ₹500க்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே போட்டி நிலவியபோது, பாஜக மேலிடம் தலையிட்டு பரஸ்பரம் சமாதானப்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும் என கூறியுள்ளார். இதை வைத்து, அவர் பக்கம் பாஜக சாய்ந்து விட்டது என்ற எண்ணம் அரசியல் ஆர்வலர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க, எர்ணாகுளம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தில் ₹7 கோடி முதலீடு செய்த சிராஜ் என்பவருக்கு, லாபத்தில் 40% பங்களிப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதியளித்தனர். படம் ₹200 கோடி வசூலித்த நிலையில், தனக்கு சேர வேண்டிய பங்கு வரவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது.
இன்னும் எத்தனை காலம் காங்கிரசை பாஜக குற்றம்சுமத்தும் என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை, பாஜகவே ஆட்சியில் உள்ளது. அப்படியிருக்கையில் காங்கிரசை பாஜக குற்றம்சுமத்துகிறது என்று தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எதுவும் நடக்கவில்லை எனில், எப்படி நாட்டில் முன்னணி கல்வி நிறுவனங்கள் வந்தன எனவும் அவர் வினவினார்.
Sorry, no posts matched your criteria.