India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவில் டிவி முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமராகத் தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும் தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார். ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார்கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயலை இதுவரை எந்தப் பிரதமரும் செய்யவில்லை என சாடியுள்ளார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணி சார்பாக பந்துவீசிய, ரீஸ் டாப்லி – 68, யாஷ் தயாள் – 51, லாக்கி ஃபெர்குசன் – 52, வைஷாக் விஜய் குமார் – 64 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். ஐபிஎல் மற்றும் டி20 வரலாற்றில், 4 பவுலர்கள் 50+ ரன்களுக்கு மேல் கொடுத்தது இதுவே முதல்முறை ஆகும்.
தமிழகத்தை 50 ஆண்டுகாலமாக ஆண்ட திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளை விட தேசிய கட்சியான பாஜக புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒன்று தான் தேர்தல் அறிக்கை. 23 மக்களவைத் தொகுதிகளில் களமிறங்கியுள்ள பாஜக, மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாக கள ஆய்வு செய்து, அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியிலும் வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
காஷ்மீரில் பள்ளிவாசல் கட்ட ஏழை ஒருவர் தானமாக வழங்கிய முட்டை ஒன்று ₹ 2.2 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மால்போராவில் மசூதி கட்ட முடிவு செய்து நிர்வாகத்தினர் நிதி திரட்டினர். அப்போது முட்டை ஒன்றை ஒருவர் வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட நிர்வாகத்தினர், ஏலத்தில் விட்டனர். முதலில் ₹70,000க்கு ஏலம் போன முட்டை, பிறகு ₹2.26 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB தோல்வி அடைந்தது குறித்து 96 பட நடிகை வர்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். 288 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய RCB அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. ஒரு கட்டத்தில் போட்டியை வென்று விடும் என்ற நம்பிக்கையே வந்தது. ஆனால், கடைசி வரை போராடி தோல்வி அடைந்ததால், X பக்கத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டு சோகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வர்ஷா.
நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பெங்களூரு வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ளதாக RCB ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கேமரூன் க்ரீன் (₹17.50 கோடி), அல்ஸாரி ஜோசப் (₹11.50 கோடி), மேக்ஸ்வெல் (₹11 கோடி) ஆகிய வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்கவில்லை. அதேபோல், இந்திய அணியின் சிறந்த பவுலரான சிராஜும் (₹7 கோடி) விக்கெட் எடுப்பதில் தடுமாறுவதால், பந்துவீச்சில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,870க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.90.50க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500க்கும் விற்பனையாகிறது.
பிரபல கன்னட நடிகர் துவராகீஷ் (81) மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா என்ற படத்தை இயக்கி நடித்த இவர், ரஜினியுடன் நான் அடிமை இல்லை, அடுத்த வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அரக்கோணம் தொகுதியில் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா தடையின்றி நடைபெறுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தோல்வி பயம் காரணமாக பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை, #அக்கா1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 5 வருடங்களுக்கு 365 நாட்களும் பணியில் இருப்பேன் என உறுதியளித்த அவர், அம்மா உணவகம் போல் ரயில் நிலையங்களில் மோடி உணவகம், தென் சென்னையில் ஒவ்வொரு பேரவை தொகுதிக்கும் ஒரு கலை – அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.