India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 NEET PG தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. முதுநிலை மருத்துவ படிப்புக்காக நடைபெறும் NEET PG தகுதித் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பதிவு இன்று தொடங்கி மே 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், natboard.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழகம் முழுவதும் நாளை முதல் 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஏப்.19 தேர்தல், வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்யுங்கள்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்ப்பது குறித்து, ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகியோர் 2 மணி நேரம் விவாதித்துள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 131 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது செயல்திறன் சிறப்பான வகையில் இல்லை என்பதால், இந்திய அணியில் இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
அதிமுக காணாமல் போகும் என்ற கூறிய பலர் காணாமல் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை கூறுகிறார். காணாமல் போனால் கண்டுபிடித்து தரலாம், அவர் போலீஸ் தானே என்று கிண்டலடித்த இபிஎஸ், அதிமுகவை அழிக்க நினைத்த எவரும் வென்றதாக வரலாறு இல்லை என்றார். பாஜகவுக்கு வந்து 5 வருடம் கூட ஆகாத அண்ணாமலை, அரசியலுக்கு குழந்தை என்றும் தெரிவித்தார்.
வேட்புமனுவில் வழக்குகளின் விவரங்களை மறைத்ததாக நயினார் நாகேந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தலை தவிர அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், மிகவும் கால தாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், மனுதாரர்கள் தேர்தலுக்கு பிறகு தேர்தல் வழக்காக இதை தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 827 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் (CMS) தேர்வுக்கு, விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், <
ஆடு மேய்க்கும் மக்களின் கோரிக்கையை, ஆடு மேய்ப்பவன் தான் நிறைவேற்றுவான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாம்பம்பட்டியில் ஆடு மேய்ப்பவர்கள் காப்பீட்டு அட்டை வேண்டும் என கேட்கிறார்கள், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர், 3ஆம் உலகப் போரை மோடி தடுத்து நிறுத்தும் ஆற்றல் மோடிக்கு உண்டு. உலக தலைவர்களிடம் அவருக்கு நல்ல தொடர்பு உள்ளதால், அவரால் அதை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
ஆர்சிபியை வேறு சிறந்த உரிமையாளருக்கு விற்றுவிடும்படி பிசிசிஐக்கு டென்னிஸ் லெஜன்ட் மகேஷ் பூபதி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். சன் ரைசர்சுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியும் 25 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்றது. இதை சுட்டிக்காட்டி தான் எழுதிய கடிதத்தில், கிரிக்கெட் விளையாட்டு, ஐபிஎல் மற்றும் ரசிகர்கள் நலனுக்காக RCBயை வேறு சிறந்த உரிமையாளருக்கு விற்றுவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.
கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி என அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ஆளுமைகள் நடந்து சென்றாலே சிங்கம் போன்றுதான் இருப்பார்கள், குரங்குகள் தான் குட்டிக்கரணம் போட்டு பொதுமக்களிடம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலையை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
ராமநாதபுரத்துக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடிக்கும் ஓபிஎஸ் தேவைப்படுகிறார் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். அதிமுக விவகாரத்தில் ஓபிஎஸ்சை பாஜக தலைமை, மோடி ஓரங்கட்டி விட்டதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்சை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா, அந்தத் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல பிரதமர் மோடிக்கும் ஓபிஎஸ் தேவைப்படுவதாக கூறினார்.
Sorry, no posts matched your criteria.