News April 16, 2024

நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து: 5 பேர் பலி

image

விஜயவாடா அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பெண்கள், 1 குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 16, 2024

சல்மான் கானை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே!

image

மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சந்தித்து பேசியுள்ளார். 2 தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத்தில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட இருவரும் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

News April 16, 2024

குடும்ப அரசியலால் இளைஞர்கள் முன்னேறவில்லை

image

திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற முடியவில்லை என ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், வளர்ந்த இந்தியாவுக்கு தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டிய தருணம் இது எனவும் அவர் தெரிவித்தார்.

News April 16, 2024

டி20 உலகக் கோப்பையில் யாருக்கு வாய்ப்பு?

image

டி20 WC இந்திய அணிக்கு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் BCCIக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. IPLஇல் இஷான் கிஷன், KL ராகுல், ஜிதேஷ் ஷர்மா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் , சஞ்சு சாம்சன் ஆகியோர் கீப்பராக உள்ளனர். இவர்களில் ரிஷப் பண்டை WCக்கு தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாற்று வீரராக சஞ்சு, தினேஷ் கார்த்திக் இவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

News April 16, 2024

காங்., தலைவருக்கு 2 நாள் தடை

image

நடிகையும், மதுரா தொகுதி பாஜக வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து சர்ச்சையாக பேசிய காங்., மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலாவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது. ரந்தீப் பேச்சு நாகரீகமற்றது எனக் கூறிய தேர்தல் ஆணையம், இன்று மாலை 6 மணி முதல் 2 நாள்கள் அவர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்துள்ளது. தான் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டதாக ரந்தீப் விளக்கமளித்துள்ளார்.

News April 16, 2024

ஜாக்குவார் தங்கம் மீது போலீசில் புகார்

image

சண்டை பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அசோக் நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தன்னையும் தனது மகன்களையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக ஜாக்குவார் தங்கத்திடம் அசோக் நகர் மகளிர் போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News April 16, 2024

திமுக கூட்டணிக்கு ஜெயின் மகா சங்கம் ஆதரவு

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக்கு ஜெயின் மகா சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு சிறு சிறு கட்சிகள் மற்றும் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜெயின் மகா சங்க நிர்வாகிகள் தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கினர்.

News April 16, 2024

இந்தியாவின் வளர்ச்சி அபாரம்

image

2024ஆம் ஆண்டு இந்தியா 6.8% பொருளாதார வளர்ச்சியடையும் என்று IMF கணித்துள்ளது. அதேபோல, 2025ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது மற்ற அனைத்து நாடுகளையும் விட மிக அதிகம். 2023ஆம் ஆண்டில் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை கண்டது. ஒப்பீட்டளவில் அமெரிக்கா – 2.5%, ஜப்பான் – 1.9%, கனடா – 1.1%, ரஷ்யா – 3.6% வளர்ச்சியை மட்டுமே கண்டன.

News April 16, 2024

தொழில் வளத்தை பெருக்குவதே நோக்கம்

image

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். படப்பை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சியை பெற வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள் எனக் கூறினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொழில் வளத்தை பெருக்க முனைப்புடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News April 16, 2024

UPSC தேர்வில் தேர்ச்சி.. முதல்வர் வாழ்த்து

image

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டிற்கு சேவை செய்யும் பயணத்தை தொடங்கியுள்ளவர்களை வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நேர்மையான மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!