India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5-6 வரை கடைசி ஒரு மணி நேரத்தில் 10% வரை வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக மாலை வேளையில் ஆர்வத்துடன் சென்ற மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019 தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவானது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 176/6 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து வந்த சிஎஸ்கே அணியில் ஜடேஜா மட்டுமே பொறுமையாக ஆடி 57* ரன்கள் சேர்த்தார். ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய மொயீன் அலி 30, ரஹானே 36, தோனி 28* ரன்கள் எடுத்தனர். LSG சார்பில் க்ருனால் பாண்டியா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது ஊழியர்களை வாரத்திற்கு 6 நாள்கள் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் ஊழியர்களை கூடுதல் நாள்கள் வேலை செய்ய அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவில் அமலுக்கு வந்துள்ள இந்த அவசர விதி, விரைவில் மற்ற பிரிவுகளிலும் அமலாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: MBBS. வயது வரம்பு: 22-37. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹56,100-₹1,77,500/-. மேலும் தகவல்களுக்கு <
காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A. கூட்டணியின் சிந்தனை தேச விரோதமாகவும், விவசாய விரோதமாக உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் வார்தாவில் பிரசாரம் செய்த அவர், காங்கிரஸின் தேச விரோத சிந்தனைகளால்தான் பல தசாப்தங்களாக விவசாயிகளின் நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிவித்தார். குடும்பத்தின் பெயரில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். ஆனால், காலம் கடந்தும் வேலை முடியவில்லை என்றார்.
சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது. 2019ஆம் ஆண்டு தென் சென்னையில் 57.05% வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் இன்று 67.82% வாக்கு பதிவாகியிருக்கிறது. அதேபோல, மத்திய சென்னையில் 2019ஆம் ஆண்டு 58.95% வாக்குகள் பதிவானது., இன்று 67.35% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. வட சென்னையில் 2019ஆம் ஆண்டு 64.23% வாக்குகளும் இன்று 69.26% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வீரர் ஜடேஜா அரை சதம் கடந்துள்ளார். 34 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 52* எடுத்து ஆடி வருகிறார். மொயீன் அலி 11* ரன்களுடன் களத்தில் உள்ளார். ரஹானே 36, ருதுராஜ் 17, ஷிவம் தூபே 3, ரிஸ்வி 1 ரன்னிலும், ரச்சின் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். தற்போது வரை சிஎஸ்கே 17.2 ஓவரில் 129/5 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், மக்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை வாக்குச் சாவடி பக்கம் சில பிரபலங்கள் தலையை காட்டவில்லை. அந்த வகையில் நடிகர் சிம்பு, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், அட்லி, நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் வாக்கு செலுத்தவில்லை.
மநீம கட்சியில் இருந்து மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ரவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உட்கட்சியில் பல அரசியல் நடைபெற்றதாகவும் கட்சியில் இருந்து விலக பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் முடியும் வரை காத்திருந்ததாகவும் தற்போது மநீம கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் ஷங்கர் ரவி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்த முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி, 60.03% பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக திரிபுராவில் 79.90% வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக பிகாரில் 47.49% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அந்தமான் நிகோபார் – 56.87%, அருணாச்சல் – 65.46%, அசாம் – 71.38%, சத்தீஸ்கர் – 63.41%, ஜம்மு காஷ்மீர் – 65.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.