India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் 4 பந்துகளை எதிர்கொண்ட தோனி 16 ரன்கள் விளாசினார். இதுவரை கடைசி ஓவரில் மட்டுமே 313 பந்துகளை எதிர்கொண்ட அவர், 772 ரன்கள் குவித்துள்ளார். இதில் 53 பவுண்டரிகள், 65 சிக்ஸர்களுடன் 246.64 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். தோனியின் அதிரடி பேட்டிங்கை பார்ப்பதற்காகவே சிஎஸ்கே ரசிகர்கள் கடைசி ஓவர் வரை காத்திருக்கின்றனர்.
வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம் வேலை நாளாக கணக்கில் கொள்ளப்பட்டு, அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்ததாக கணக்கிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பினை தற்போது அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல்கட்ட தேர்தலே சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இன்றைய வாக்குப்பதிவின் மூலம் இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்தது தெளிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் உலகப் பொருளாதாரம் 2050ஆம் ஆண்டுக்குள் 19% வீழ்ச்சியடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவின் வருவாயைப் பொறுத்தமட்டில், 22% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலக சராசரியை விட 3% அதிகமாகும். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் வருவாய் 11% சரியும் எனக் கூறப்படுகிறது. உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு 38 டிரில்லியன் டாலர்களை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் ஐஸ் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சமீபத்தில் திரிசூல், திரிஷா என்ற தனது குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐஸ் சாப்பிட்டதே மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின்னரே காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பஹத் ஃபாசில் தயாரிப்பில் கிரிஷ் AD இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ‘பிரேமலு’. கேரளா மட்டுமின்றி இப்படம் தமிழ்நாட்டிலும் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு (2025) வெளியாகும் இப்படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என மறுக்கவோ, பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், பகல் வேளையில் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வரும்போது அனைத்து பொருட்களையும் வழங்க அறிவுறுத்திய தமிழக அரசு, பொருட்களை தடையின்றி அனுப்ப TNCSC-யை கேட்டுக்கொண்டுள்ளது.
உலக கல்லீரல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியர்களிடையே ஏற்படும் கல்லீரல் நோய்களில் மூன்றில் ஒரு பங்கு ஹெபடைடிஸ் B வகை தொற்றால் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஹெபடைடிஸ் B தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் இந்தியர்கள் 2ஆவது இடத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை இந்த நோய்த் தொற்று பாதிக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவிற்கு ரயிலில் சென்ற அந்த பெண்ணிடம் கேரள இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின் திருவனந்தபுரத்தில் ரயில் நின்றதும் அவர் தப்பியோடிய நிலையில், அந்த பெண் ரயில்வே போலீசிடம் புகார் அளித்துள்ளார். CCTV வீடியோ காட்சி அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகளை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் காரணமாக இஸ்ரேலில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் இடையே தற்போது மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.