News April 20, 2024

அரசுப் பேருந்துகளில் கூடுதல் பயணிகள் பயணம்

image

மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17, 18ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் 4.03 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசுப் பேருந்துகளில் பயணித்தவர்களை விடவும் இத்தேர்தலுக்கு 1.48 லட்சம் பேர் கூடுதலாகப் பயணித்துள்ளனர். அதேபோல், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது அரசுப் பேருந்துகளில் பயணித்தவர்களின் எண்ணிக்கைய விட இது கூடுதல் ஆகும்.

News April 20, 2024

வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல்

image

இவிஎம், விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாகனங்களில் இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு, ஸ்ட்ராங் ரூம்களில் வைத்த நடைமுறையை நேரம் வாரியாக தேர்தல் ஆணையம் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்தது. பயன்படுத்தாத இவிஎம், விவிபேட் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டன.

News April 20, 2024

இவிஎம் இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

image

இவிஎம் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர் 24 மணி நேர காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழக காவல்துறை அதிகாரிகள் 2வது கட்ட பாதுகாப்புப் பணியிலும், காவலர்கள் 3ஆவது கட்ட பாதுகாப்பு பணியிலும் அமர்த்தப்பட்டுள்ளனா்.

News April 20, 2024

தேர்தல் ஆணையம் குளறுபடி அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்தது முடிந்த நிலையில், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்து இருக்கிறது. நேற்று 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சாகு அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் 69.46% தான் வாக்குப்பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் கட்சிகளையும், மக்களையும் குழப்பியுள்ளது.

News April 20, 2024

IPL: பார்ட்னர்ஷிப்பில் லக்னோ புதிய சாதனை

image

சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ அணி புதிய சாதனை படைத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் – குயின்டன் டி காக் ஜோடி, 134 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர். இது, ஐபிஎல் வரலாற்றில் CSK அணிக்கு எதிராக அடித்த 3ஆவது அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஆகும். 1.வாட்சன், ரஹானே- 144 (ராஜஸ்தான் 2015), 2.ப்ரித்வி ஷா, ஷிகர் தவன்- 138 (டெல்லி 2021) ஜோடி முதல் 2 இடங்களில் உள்ளன.

News April 20, 2024

தீவிர கண்காணிப்பில் ஸ்ட்ராங் ரூம்கள்

image

இவிஎம், விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய EC பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக, இவிஎம், விவிபேட் இயந்திரங்கள் அனைத்துக்கும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே சிசிடிவி கேமராக்களை பொருத்தி, 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது.

News April 20, 2024

2019 தேர்தலை விட தருமபுரியில் வாக்குப் பதிவு குறைவு

image

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரியில் 82.41% வாக்குகள் பதிவாகின. அந்தவகையில், 2024 தேர்தலிலும் தருமபுரியிலேயே அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால், கடந்தத் தேர்தலை விட, இம்முறை 1% வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. 2019 தேர்தலில் குறைந்தபட்சமாக தென்சென்னையில் 57.07% வாக்குகள் பதிவாகின. இம்முறை, அதைவிடக் குறைவாக மத்திய சென்னையில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது.

News April 20, 2024

தமிழகத்தில் 69.46% வாக்குப்பதிவு

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 81.48%, கள்ளக்குறிச்சியில் 79.25% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென் சென்னையில் 54.27% வாக்குகள் பதிவாகி உள்ளன. வட சென்னை 60.13%, கோவை 64.81%, சேலம் 78.13%, நாமக்கல் 78.16%, மதுரை 61.92% வாக்குகள் பதிவாகி உள்ளன.

News April 20, 2024

வாக்கு எண்ணும் மையங்களில் இவிஎம் இயந்திரங்கள்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து, இவிஎம் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இவிஎம், விவிபேட் இயந்திரங்கள் பூட்டி சீலிடப்பட்டன. பின்னர் மத்திய பாதுகாப்புப் படையினர் பின்தொடர் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு மையங்களில் வைக்கப்பட்டன.

News April 20, 2024

CSKvsLSG: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

image

சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட்டுகளை, CSK அணியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலும், பேடிஎம் இன்சைடர் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ₹1,700, ₹2,500, ₹3,500, ₹4,000, ₹6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!