News April 20, 2024

மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்: தமிழிசை கோரிக்கை

image

தென் சென்னையில் இரவு 7 மணி வரை 67.82% வாக்குப்பதிவு எனக் கூறப்பட்ட நிலையில், 12 மணிக்கு (13% குறைவு) 54.27% மட்டுமே வாக்குப்பதிவு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தென் சென்னைக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என முதல் ஆளாக வலியுறுத்திய பாஜக வேட்பாளர் தமிழிசை, பூத் ஏஜென்ட்களை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

News April 20, 2024

மே 1 முதல் ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணம் மாற்றம்

image

சேமிப்பு கணக்குகளுக்கான 17 சேவைக் கட்டணங்களை மே 1 முதல் ஐசிஐசிஐ வங்கி மாற்றவுள்ளது. நகர்ப்புற வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளுக்கான வருடாந்தரக் கட்டணம் ₹200ஆகவும், கிராமப் பகுதிகளுக்கு ₹99ஆகவும் மாற்றவுள்ளது. Imps மூலம் ₹1,000 வரை அனுப்ப ₹2.50 கட்டணம், ₹1,000 முதல் ₹25,000 வரை அனுப்ப ₹5 கட்டணம், ₹25,000 முதல் ₹5 லட்சம் வரை அனுப்ப ₹15 கட்டணமும் வசூலிக்கவுள்ளது.

News April 20, 2024

அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்

image

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களை அதிமுகவினர் எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர்கள், முகவர்கள், கூட்டணி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News April 20, 2024

ஹெட்போனில் சத்தமாக இசை கேட்டால் காது கேட்காது

image

உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக WHOவின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதில் 20% பேரிடம் மட்டும் காது கேட்கும் கருவிகள் உள்ளது. மேலும், ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசையைக் கேட்பதால் 100 கோடி இளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்ல 2050இல் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித்திறன் பாதிப்பு இருக்குமாம்.

News April 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம்: மாறுபாடு (1)

image

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் நேற்றிரவு 7 மணி, இரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் மாறுபட்டுள்ளது. அதைப் பார்க்கலாம். இரவு 7மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் வடசென்னையில் 69.26%, இரவு 12 மணி அறிவிப்பில் 60.13% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் காஞ்சிபுரத்தில் 72.99%, இரவு 12 மணி அறிவிப்பில் 71.55% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம்-மாறுபாடு (3)

image

இரவு 7 மணி அறிவிப்பில் அரக்கோணத்தில் 73.92%, இரவு 12 மணி அறிவிப்பில் 74.08% வாக்குப்பதிவாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் வேலூரில் 73.04%, இரவு 12 மணி அறிவிப்பில் 73.42% வாக்குப்பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரவு 7 மணி அறிவிப்பில் திருவண்ணாமலையில் 73.55%, இரவு 12 மணி அறிவிப்பில் 73.88% வாக்குப்பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம்- மாறுபாடு (2)

image

இரவு 7 மணி அறிவிப்பில் மத்திய சென்னையில் 67.35%, இரவு 12 மணி அறிவிப்பில் 53.91% வாக்குப்பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் திருவள்ளூரில் 71.87%, இரவு 12 மணி அறிவிப்பில் 68.31% வாக்குப்பதிவாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் ஸ்ரீபெரும்புதூரில் 69.79%, இரவு 12 மணி அறிவிப்பில் 60.21% வாக்குப்பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 20, 2024

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ரத்து

image

இந்தியா வரும் தனது பயணத்தை திடீரென ஒத்திவைப்பதாக, ட்விட்டர் (X) உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா கார் தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கு இடங்களை ஆய்வு செய்வதற்காகவும், பிரதமர் மோடியை சந்திப்பதற்காகவும் நாளை மறுநாள் (ஏப்ரல் 22) எலான் மஸ்க் இந்தியா வரவிருந்தார். இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால், இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 20, 2024

BREAKING: நடிகர் விஜய் மீது புகார்

image

நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2024

சென்னையில் 4% வாக்குப்பதிவு குறைவு

image

சென்னையில் 2019 மக்களவைத் தேர்தலை விட, தற்போது 4% வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. 2019ல் தென் சென்னையில் 57.07% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 60.13% வாக்கு பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் 2019ல் 58.98% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 54.27% வாக்குகள் பதிவாகி உள்ளது. வட சென்னையில் 2019ல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 60.13% வாக்குகளே பதிவாகி உள்ளன.

error: Content is protected !!