News April 20, 2024

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

image

மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய அதிமுக, தேமுதிகவினருக்கு பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாகப் பணியாற்றி உள்ளதாக கூறிய அவர், வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறினார். மேலும், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பை அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 20, 2024

IPL: கடைசி ஓவரில் அதிக ரன் குவித்த வீரர்கள்

image

ஐபிஎல் தொடரின் கடைசி (20ஆவது) ஓவரில் அதிக ரன் குவித்த வீரர்கள்: ▶தோனி 99 போட்டிகளில் – 772 ரன்கள், ▶பொல்லார்டு 62 போட்டிகளில் – 405 ரன்கள், ▶ஜடேஜா 75 போட்டிகளில் – 368 ரன்கள், ▶தினேஷ் கார்த்திக் 46 போட்டிகளில் – 292 ரன்கள், ▶ஹர்திக் பாண்டியா 41 போட்டிகளில் – 287 ரன்கள், ▶ரோஹித் ஷர்மா 28 போட்டிகளில் – 257 ரன்கள், ▶ஏ.பி.டிவிலியர்ஸ் 33 போட்டிகளில் – 225 ரன்கள், ▶பிராவோ 41 போட்டிகளில் – 213 ரன்கள்

News April 20, 2024

முறையாக வாக்குப்பதிவு நடக்கவில்லை

image

தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தென்சென்னை வேட்பாளர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். வாக்குச் சதவீதம் குறைந்தது கவலையளிக்கிறது எனக் கூறிய அவர், வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் தேர்தலை நடத்தக்கூடாது. வாரத்தின் முதல் கடைசி நாளில் தேர்தலை நடத்தினால், மக்கள் விடுமுறையில் சென்று விடுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.

News April 20, 2024

Breaking: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

News April 20, 2024

வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணை சோதனை

image

வடகொரியா 2 ஏவுகணைகளை சோதித்திருப்பது தென்கிழக்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உடன் மோதல் போக்கு நீடிப்பதால், அந்நாடுகளை அச்சுறுத்த வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதன்படி, புதிதாக ஹவாசால் 1 ரா-3, பியோல்ஜி 1-2 ஆகிய 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.

News April 20, 2024

படப்பிடிப்பில் சிக்கியதால் சிம்பு வாக்களிக்கவில்லை

image

படப்பிடிப்பில் சிக்கிக் கொண்டதால் தான், நடிகர் சிம்புவால் வாக்களிக்க முடியாமல் போனதாக தகவல் கசிந்துள்ளது. ‘தக் லைஃப்’ படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்ததால், நேற்று நடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் அவர் பங்கேற்கவில்லை. ராஜஸ்தானில் நடந்து வரும் படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசனும் விரைவில் இணையவுள்ளார். படத்தை 2025இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 20, 2024

அமித் ஷாவுக்கு ₹36 கோடி சொத்துக்கள்

image

அமித் ஷா தனக்கு ₹36 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். காந்திநகர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்துள்ள வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில், ₹20 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ₹6 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகக் கூறியுள்ளார். சொந்தமாக கார் இல்லை, ₹17 லட்சம் கடன் உள்ளது, வருடாந்தர சம்பளம் ₹ 75.09 லட்சம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 20, 2024

மோடியின் ஊழல் பள்ளி நிரந்தரமாக மூடப்படும்

image

நாட்டில் ஊழல் பள்ளியை மோடி நடத்திக் கொண்டிருப்பதாக ராகுல் சாடியுள்ளார். அவர் தனது X பதிவில், மோடி நாட்டில் ஊழல் பள்ளியை நடத்துவதாகவும், அதில் அவரே ஊழல் அறிவியல் பாட ஆசிரியராக வகுப்பெடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பாஜக தலைவர்களுக்கு அதனை பாஜக கட்டாய பாடமாக்கி இருப்பதாகவும், I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்பு அப்பள்ளி நிரந்தரமாக மூடப்படும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

News April 20, 2024

வாக்கு சதவீத மாறுபாடு: வாய் திறக்குமா தேர்தல் ஆணையம்

image

தமிழ்நாட்டின் பல மக்களவைத் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குபதிவு தரவில் மிகப்பெரிய மாறுபாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இரவு 7 மணிக்கு வெளியாகும் வாக்குப்பதிவு விவரம், இரவு 12 மணி அறிக்கையுடன் ஒப்பிடும்போது 1% முதல் 1.5% வரை உயரும். ஆனால், இந்த தேர்தலில் 3% வரை குறைந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் இதுவரை வாய் திறக்கவில்லை. உடனே உரிய விளக்கமளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News April 20, 2024

நகர்புறங்களில் 10இல் 4 பேர் வாக்களிக்கவில்லை!

image

நகர்ப்புறங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். நகர்புறங்களில் 10இல் 4 பேர் வாக்களிக்கவில்லை என்று கூறிய அவர், அனைத்து தரவுகளையும் ஆய்வு செய்து, இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறித்த தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!