India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் பிரமாண்ட கோபுரத்துடன் அழகாக அமைந்துள்ளது பாபநாசநாதர் கோயில். 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோயில், நவகைலாச தலங்களில் ஒன்றாகும். இந்திரனின் பாவத்தை நீக்கியதால், இறைவன் பாபநாசநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள அம்மன் உலகம்மையாக வணங்கப்படுகிறார். தாமிரபரணியில் நீராடி, பாபநாசநாதரை வழிபட்டால் தீராத பாவமும் தீரும் என்பது ஐதீகம்.
ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் மெர்குர்க் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். எப்போதும் முதல் பந்தை சிக்சருடன் தொடங்கும் இவர், நேற்று முதல் 2 பந்துகளை டாட் வைத்தார். அது ஏன் என்பது பின்னர் தான் தெரிந்தது. 5 Four, 7 Six என விளாசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர், 18 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக, 3ஆவது ஓவரில் 4,4,6,4,6,6 என வாண வேடிக்கை காட்டினார்.
ஜப்பானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 7 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை. பசிபிக் கடலில் இரவு நேர பயிற்சியில் அந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது 25 நிமிட இடைவெளியில் விபத்துக்குள்ளாகின. ஹெலிகாப்டர்களில் இருந்த 7 வீரர்களும் கடலில் மூழ்கியதால், அவர்களை தேடும் பணி நடக்கிறது. ஏப்ரல் மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் பலியாகினர்.
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 11 Four, 6 Six விளாசி 89(32) ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் முதல் 6 ஓவர்களிலேயே (பவர் பிளே) 125 ரன்களை குவித்தது ஐதராபாத் அணி. நடப்பு ஐபிஎல் தொடரில் 62, 19, 31, 21, 102, 89 ரன்கள் குவித்துள்ள அவர், அதிக ரன் குவித்தவர்களுக்கான வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதைபார்த்த நண்பர்கள் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெங்களூரு குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பிருக்கலாம் என என்ஐஏ சந்தேகம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான அப்துல் மதின் தாஹா, முசாபிர் ஹூசேன் சாகீப் ஆகியோர் ஆன்லைனில் கர்னல் என்பவரிடம் உரையாடியுள்ளனர். அந்த நபர், அபுதாபியில் இருந்து செயல்படுவதாகவும், அவர் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என்றும் என்ஐஏ சந்தேகம் எழுப்பியுள்ளது.
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் வீரர் நடராஜன் அதிரடி காட்டியுள்ளார். நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர், 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் டெல்லி அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியை தழுவியது. இந்த சிறப்பான பந்துவீச்சில் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில், 10 விக்கெட்டுகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளார்.
சத்தீஸ்கரில் ஆயுதமின்றி இருந்த 17 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 16ஆம் தேதி 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மாவோயிஸ்ட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுதமின்றி காயம்பட்டு கிடந்த 17 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை காவல்துறை மறுத்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதத்தில் அடுத்தடுத்து பெருமளவில் வேறுபாடுகள் ஏற்பட்டது, வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அவசரம் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் முதலில் போன் மூலம் மாதிரி தகவலே பெறப்பட்டது. அதனால், இறுதித் தகவலில் வேறுபாடு ஏற்பட்டதாகவும், குளறுபடி எதுவும் நடைபெறவில்லை எனவும் விளக்கமளித்தார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை பார்த்து, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்குடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். 2024 ஐபிஎல் சீசனில், சன் ரைசர்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கில் அசத்தி வருகிறது. 20 ஓவர்களில் 250 ரன்களுக்கும் மேல் சாதாரணமாக குவிக்கிறது. இதை கண்ட நெட்டிசன்கள், அந்த அணியை ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.