India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஏப்ரல் – 22 | ▶ சித்திரை – 09 ▶கிழமை: திங்கள் | ▶திதி: சதுர்த்தசி ▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: காலை 07:30 – 09:00 வரை ▶எமகண்டம்: 10:30 – 12:00 வரை ▶குளிகை: 01:30 – 03:00 வரை ▶சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல், 18% அதிகரித்து ரூ.19 லட்சத்து 58 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில், இதன் மதிப்பீடு 19 லட்சத்து 45 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டிருந்தது. இதே போன்று, மறைமுக வரி வசூலும் ரூ.14 லட்சத்து 84 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இது மதிப்பீட்டை விட மிகவும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கியுள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ள இயலும். மூத்த குடிமக்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தவும் ஐ.ஆர்.டி.ஏ அறிவுறுத்தியுள்ளது.
சிவசேனா கட்சியின் தேர்தல் பிரசார பாடலில் இருந்து ‘ஹிந்து’, ‘ஜெய் பவானி’ வார்த்தைகளை நீக்க முடியாதென தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார். உத்தவ் தாக்கரே கட்சிக்கு ‘தீப்பந்தம்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதனை விளம்பரத்தும் வகையில் சமீபத்தில் அக்கட்சி வெளியிட்ட பாடலில், ‘ஹிந்து’,‘ஜெய் பவானி’ வார்த்தைகள் இடம்பெற்றது. இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பூமி மாசடைவதைத் தடுக்க உறுதி ஏற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர்கள் வாழத் தகுதியான ஒரே இடமான பூமி, சுற்றுச்சூழல் பாதிப்பால், காற்று மாசடைந்து, தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது. 1970ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 175 நாடுகள் இந்த தினத்தை கடைப்பிடிக்கின்றன.
2014ஆம் ஆண்டு ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், சென்னை அணி தோல்வியடைந்த போது, தோனி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரசிகர்களால் ‘கேப்டன் கூல்’ என்றழைக்கப்படும் தோனி, அன்று டிரஸ்ஸிங் ரூமில் பேட் மற்றும் ஹெல்மெட்டை வீசி விட்டு, “ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் தோற்றுவிட்டோம்” என தோனி மனமுடைந்த கதறியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
➤ 1809 – ஆஸ்திரிய ராணுவம், நெப்போலியன் தலைமையிலான முதலாம் பிரெஞ்சு பேரரசு ராணுவத்திடம் தோல்வியடைந்தது ➤ 1970 – புவி நாள் கொண்டாடப்பட்டது. ➤ 1977 – ஒளியிழை ( Optical Fiber) முதற்தடவையாக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ➤2006 – ஒடிசாவில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது ➤ 2016 – புவி வெப்பமயமாதலைத் தவிர்ப்பதற்கான உடன்பாடு பாரிஸ் நகரில் எட்டப்பட்டது.
சட்டவிரோதமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு தனது கடிதத்தில், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு வரும் வெளிநாட்டினர் தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மேலும்,அறிவுரை மீதான நடவடிக்கை குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தல் நடத்தை விதிகளால் அரசு நிர்வாகம் செயல்பட முடியாமல் மொத்தமாக முடக்கப்படுவதோடு, 45 நாட்களுக்கு மேலாக வணிகர்களை பாதிப்புக்கு உள்ளாக்குவது நியாயமற்ற ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதை நம் கலாசாரம் ஒருபோதும் அங்கீகரித்தது இல்லையென நடிகர் முகேஷ் கன்னா தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு முன்பு லிவ் இன் உறவில் இருந்தால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியுமென நடிகை ஜீனத் அமன் கூறியிருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள முகேஷ், ‘அவர் வேண்டுமானால் அவ்வாறு வாழலாம். அதற்காக, அனைவரையும் அவ்வாறு இருக்க சொல்வதை ஏற்க முடியாது’ என்றார்.
Sorry, no posts matched your criteria.