News April 22, 2024

3 மாநிலங்களில் மட்டும் வாக்குப்பதிவு அதிகரிப்பு

image

முதல்கட்டத் தேர்தலில் 3 மாநிலங்களில் மட்டும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. மக்களவைக்கு 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிக்கிமில் 78.6% வாக்குப்பதிவாகி இருந்தது. அது தற்போது 79.9% ஆக அதிகரித்துள்ளது. மேகாலயாவில் 2019இல் 71.4% வாக்குப்பதிவாகி இருந்த நிலையில் தற்போது 76.6% ஆக உயர்ந்துள்ளது. சத்தீஸ்கரில் 2019இல் 66% வாக்குப்பதிவாகி இருந்த நிலையில், தற்போது 68.3%ஆக அதிகரித்துள்ளது.

News April 22, 2024

முதல்கட்டத் தேர்தல்: 18 மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு

image

முதல்கட்டத் தேர்தல் நடந்த 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 18இல் வாக்குப்பதிவு சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் அதிகபட்சமாக 25% குறைந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 7.7%, மத்திய பிரதேசத்தில் 7%, ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் 6% வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 2.5% வாக்குப்பதிவு சரிந்துள்ளது. கடும் வெயிலே வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

News April 22, 2024

Apply Now: 10ஆம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை!

image

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் 422 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Ramp Driver, Handyman பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18 – 29. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 25. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹22,530 – ₹24,960/-. கூடுதல் தகவல்களுக்கு <>AIASL<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News April 22, 2024

மறு வாக்குப்பதிவு நடத்த தமிழக பாஜக கோரிக்கை

image

எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டார்களோ, அந்த தொகுதிகளில் மீண்டும் அவர்களை சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்க கூடியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திமுகவினர் கடைசி நேரத்தில் நீக்கி உள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலை, எல்.முருகன் போட்டியிடும் தொகுதிகளில் தலா 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

News April 22, 2024

பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மாறிய மாயாவதி?

image

உ.பி.,யில் INDIA கூட்டணியின் வெற்றியை தடுக்கவும், வாக்குகளை சிதறடிக்கவும் கச்சிதமாக காய்களை நகர்த்திய மாயாவதி, பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மாறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள 64 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் 18 இஸ்லாமியர், 14 ஓபிசி, 10 பிராமணர் இடம்பெற்றுள்ளனர். INDIA கூட்டணி மிகவும் நம்பக் கூடிய தலித், ஓபிசி, இஸ்லாமிய வாக்குகளை அவர் பிரித்து விடுவாராம்.

News April 22, 2024

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,018 வழக்குகளில் தீர்ப்பு

image

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,018 கிரிமினல் வழக்குகளில் கடந்த ஒரே ஆண்டில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜன. 1 நிலவரப்படி 4,697 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில், 2,018 வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. எனினும் புதிதாக 1,746 வழக்குகள் பதிவானதால், நிலுவை வழக்குகள் 4,472ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பே விரைந்து தீர்ப்பளிக்க காரணமாக கூறப்படுகிறது.

News April 22, 2024

மணிப்பூரில் 11 மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு

image

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குப்பதிவு மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூரில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இம்பால் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பல்வேறு ஓட்டுப்பதிவு மையங்களில் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் கட்சி புகாரைத் தொடர்ந்து மறு வாக்குப்பதிவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

News April 22, 2024

இலவச கல்வி சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்

image

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. இதன் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தில் சேர விரும்புவோர் வரும் மே 18ஆம் தேதி வரை, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மே 27ஆம் தேதி தகுதியானவர் விவரம் அறிவிக்கப்படும்.

News April 22, 2024

சிறந்த காலை உணவுகள் அறிவோமா?

image

காலையில் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைக் எடுத்துக்கொள்வது அவசியம். வைட்டமின் சி சத்து வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனைத் தரக்கூடியது. உடைக்காத முழுத் தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

News April 22, 2024

சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6.30 மணி அளவில் நடைபெறுகிறது. மாசி வீதிகளில் தேரை வடம்பிடிக்கவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யவும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இதையொட்டி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர் சேவை நடைபெறுகிறது.

error: Content is protected !!