News August 10, 2025

மனைவி சமையலை கணவர் விமர்சிப்பது குற்றமல்ல: HC

image

மனைவியின் சமையல், ஆடை பற்றி விமர்சிப்பது கிரிமினல் குற்றமல்ல என மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. MH-யை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் வீட்டார் கண்ணியமாக நடத்தவில்லை என போலீசில் புகார் செய்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், ஐகோர்ட்டை நாடிய கணவரின் மனுவை விசாரித்த நீதிபதி, பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்பட்டால் தான் IPC 498A-ல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

News August 10, 2025

சிக்கன் விலை கடும் சரிவு

image

TN-ல் கோழி இறைச்சி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் மொத்த விற்பனையில் 1 கிலோ ₹132-க்கு விற்பனையான சிக்கன் தற்போது ₹93-க்கு விற்பனையாகிறது. 10 நாள்களில் கிலோவுக்கு ₹39 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிலோ ₹240-ல் இருந்து ₹200 ஆக குறைந்துள்ளது. ஆடி மாதம் ஆன்மிக மாதம் என்பதால் நுகர்வு குறைவே விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் கூறியுள்ளனர். உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?

News August 10, 2025

SPORTS ROUNDUP: மெஸ்ஸி வருகை ரத்து!

image

➤சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ்: 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, எம்.பிரனேஷ் ஆகியோர் வெற்றி.
➤சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் சின்னர்(இத்தாலி), சிட்சிபாஸ்(கிரீஸ்) வெற்றி.
➤அக்டோபர்- நவம்பரில் கேரளா வரவிருந்த மெஸ்சி, அர்ஜென்டினா அணியின் வருகை ரத்து.
➤முதல் ODI: ஹசன் நவாஸ் அதிரடியில் PAK வெற்றி. முதலில் ஆடிய WI 280 ஆல் அவுட். PAK 284/5.

News August 10, 2025

ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? காங்., MP கேள்வி

image

துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பின் ஜக்தீப் தன்கரை ஏன் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என காங்., MP கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எங்கே இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா எனவும், அவர் இருக்கும் இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தன்கருடன் எந்த தொடர்பும் இல்லாததால் நாட்டு மக்கள் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் மமிதா

image

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு ஒப்பந்த செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அட்லியின் உதவி இயக்குநர் சிவா என்பவர் இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, அர்ஜித் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

News August 10, 2025

திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: வைகோ உறுதி

image

மதிமுக, திமுக கூட்டணியில் உள்ளது; அங்கேயே தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, NDA கூட்டணியில் மதிமுக இணைய உள்ளதாகவும், துரை வைகோவுக்கு மத்திய அமைச்சராகும் ஆசை இருப்பதாகவும் மல்லை சத்யா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். இதனை முற்றிலும் மறுத்துள்ள வைகோ, தான் எப்போதும் கூட்டணி தர்மத்தை மதிப்பவன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

News August 10, 2025

திமுகவிடம் பொதுத்தொகுதிக்கு பாடுபடும் திருமா: சீமான் தாக்கு

image

தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் உள்ளது; இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வருகிறது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமா என்ன பாடுபடுகிறார். பொதுக்குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்கக்கூடாது என்பதுபோல் பொதுத்தொகுதிக்கு நீங்கள் எல்லாம் ஆசைப்படக்கூடாது என்று திமுக சொன்னது பதிவாகியுள்ளது எனவும் சாடினார்.

News August 10, 2025

பும்ராவிற்கு எதிராக கிளம்பும் முன்னாள் வீரர்கள்

image

பும்ரா தனது விருப்பத்திற்கேற்ப டெஸ்ட்டில் பங்கேற்பது குறித்து முன்னாள் வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். IND vs ENG தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என பும்ரா கூறியதை வேறு ஒருவர் கூறியிருந்தால், இந்நேரம் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என ரஹானேவும், ஓய்வு இல்லாமல் பந்துவீசும் சிராஜ் போன்ற வீரர்கள் தான் அணிக்கு தேவை என கபில் தேவும் தெரிவித்துள்ளனர்.

News August 10, 2025

இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் ‘சலபாசனம்’

image

✦இடுப்பு தசைகள் வலுப்பெறும்.
✦தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையில் பட, கைகளை உடலுக்குப் பக்கவாட்டில் நீட்டவும்.
➥கழுத்து, கால் & தொடைகளை மெதுவாக மேலே தூக்கவும். இந்த நிலையில் 15-30 விநாடிகள் இருந்து, பின் பழைய நிலைக்குத் திரும்பவும்.
✦செரிமான மண்டலம் மேம்படுகிறது.
✦ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

News August 10, 2025

பாமகவால் திமுகவை வீழ்த்த முடியாது: மனோ தங்கராஜ்

image

2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், ‘அன்புமணியின் ஆணி வேரே உடைந்து இருக்கிறது; அடுத்த தேர்தலுக்கு பிறகு பாமக என்ற கட்சி இருக்காது’ என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அன்புமணி நினைத்தால் எல்லாம் திமுகவை வீழ்த்த முடியாது; 2026-ல் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!