News April 22, 2024

உடல் சூட்டைத் தணிக்கும் மஞ்சள் பானகம்

image

கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிக்க மஞ்சள் பானகத்தைப் பருகலாமென மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். பசும் மஞ்சளைத் தோல் சீவி அரைத்துச் சாறு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சீரகம், மிளகு, ஏலக்காய், சுக்கு, சாதிக்காய், எலுமிச்சைச் சாறு, தேன் கலந்தால் மஞ்சள் பானகம் ரெடி. இப்பானகத்தைக் குடித்தால் அஜீரணத்தால் வரும் தலைவலி நீங்குமாம்.

News April 22, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,845க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89க்கும், கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.

News April 22, 2024

ஹிந்து பெண்களின் தாலியைப் பறிக்கும் அரசு?

image

இந்துப் பெண்களின் தாலியைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தானில் பேசிய அவர், நாட்டின் செல்வங்களில் ஊடுருவல்காரர்களுக்கும் அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் முதல் உரிமை என்கிறது காங்கிரஸ். அதன் தேர்தல் அறிக்கையை படித்துப் பாருங்கள். யாருடைய சொத்தை யாருக்கு கொடுப்பது? பாஜக ஒருபோதும் அதனை அனுமதிக்காது” எனக் கூறினார்.

News April 22, 2024

மே.1இல் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்!

image

விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீசாகி வரவேற்பை பெற்று வருவதையொட்டி, அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே.1ஆம் தேதி தமிழகம் முழுவதும் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

News April 22, 2024

2024 ஐபிஎல்: அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்

image

2024 ஐபிஎல்லில் இதுவரை 37 போட்டிகள் முடிந்துள்ளன. அதன் முடிவின்படி, ஆர்சிபி வீரர் கோலி 8 போட்டிகளில் விளையாடி 379 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் ஹைதராபாத் வீரர் டி.எம். ஹெட் (324 ரன்கள்), 3ஆவது இடத்தில் ராஜஸ்தான் வீரர் பராக் (318 ரன்கள்), 4ஆவது இடத்தில் குஜராத் வீரர் ஷுப்மன் கில் ( 298 ரன்கள்), 5ஆவது இடத்தில் மும்பை வீரர் ரோஹித் ஷர்மா (297 ரன்கள்) உள்ளனர்.

News April 22, 2024

தேர்தல் ஆணையத்திற்கு “Rest in Peace”

image

தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பிடிஆர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தேர்தல் நேரங்களில் மதம், சாதி ரீதியாக பேசுவது குற்றம். அதைமீறி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை குறிப்பிடும் வகையில் “Rest in Peace” என்று பதிவிட்டுள்ளார்.

News April 22, 2024

இந்த ஜூஸ் குடிங்க, புற்றுநோய், இதயநோய் வரவே வராது

image

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. அதில் புற்றுநோய் மற்றும் இதய நோயை தடுக்கும் லைகோபீன் புரோதம் அதிகம் உள்ளது. இதேபோல் தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிகம் உள்ளது. அதனால் தக்காளியை ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால், புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள் வரவே வராது என்கிறது ஆய்வுத் தகவல் ஒன்று.

News April 22, 2024

IPL: ராஜஸ்தான் – மும்பை இடையே இன்று மோதல்

image

நடப்பு ஐபிஎல் தொடரின் 38ஆவது போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இதில், RR, MI அணிகள் மோதவுள்ளன. நடந்து முடிந்த 7 போட்டிகளில் 6இல் வென்ற RR அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. RR அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க இன்று கடுமையாக போராடும். அதே நேரத்தில் ஃபிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, MI அணி வீரர்களும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

News April 22, 2024

அயோத்தி ராமர் கோயிலில் 1.50 கோடி பேர் தரிசனம்

image

அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 3 மாதத்தில் 1.50 கோடி பேர் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தி கோயில் ஜனவரி மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட்டது. அதையடுத்து அங்கு நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் கோயிலுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவதாகவும், இதுவரை 1.50 பேர் தரிசனம் செய்திருப்பதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 22, 2024

பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு

image

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வன்முறை நடந்தது. அதனால், இன்று அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

error: Content is protected !!