India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்களின் தாலி உள்ளிட்ட சொத்துகளை முஸ்லிம்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் காங்கிரஸ் அளித்துவிடும் எனப் பேசியதற்கு மோடி மீது ஏன் EC நடவடிக்கை எடுக்கவில்லை என்று கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், மோடியின் பேச்சைச் சுட்டிக்காட்டி, நாட்டில் அரசியல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்ததில்லை என்றார். மோடியிடம் விளக்கம் கேட்டுத் EC நோட்டீஸ் அனுப்பவும் அவர் வலியுறுத்தினார்.
FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், வெறும் 17 வயதில், இப்போட்டியில் இதுவரை இல்லாத வகையில் இளம் வீரராகக் குகேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.
கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகள் விடுமுறையில் வகுப்புக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கோடை விடுமுறையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது. மீறி சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
‘இட்ஸ் ஃபேஷன் பேபி’ என்ற தலைப்பில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தப் படங்களில் வெள்ளை நிற மாடல் உடையில் செம ஸ்டைலாக இருக்கும் அவர் அணிந்து இருந்த வாட்ச் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பாம்பு போன்ற வடிவில் இருக்கும் Serpenti Spiga பிராண்ட் வாட்சின் விலை ரூ.70 லட்சமாம். சமந்தாவின் அழகும் மட்டுமல்ல விலையும் ரசிகர்களுக்கு கிறக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. ஆசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் நிலவும் உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை காரணமாக வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயர்ந்து 73,728ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 190 புள்ளிகள் உயர்ந்து, 22,337ஆக இருந்தது.
ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்ததைத் தான் தடுத்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் 2011க்குப் பிறகு தான் வந்ததாகக் கூறிய அவர், தான் போட்டியிட்ட எந்தத் தேர்தல்களிலும் பணம் கொடுத்ததில்லை என்று தெரிவித்தார். மேலும், ஆர்.கே.நகரில் இபிஎஸ் அணியினர் தான் பணம் கொடுத்ததாகவும், அதைப் பார்த்துத் தனது கட்சியினர் டோக்கன் கொடுத்தபோது அதனை தடுத்து நிறுத்தியதாவகவும் அவர் கூறினார்.
41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5ஆம் மதுரையில் மாநாடு நடைபெறும் என வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். இதனால், மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வணிகர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
2024 ஐபிஎல்லில் Purple தொப்பிக்கு 5 பேர் இடையே போட்டி நிலவுகிறது. அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்க்கு Purple தொப்பி வழங்கப்படும். இதுவரை நடந்த 37 போட்டிகள் முடிவின்படி, மும்பையின் பும்ரா, பஞ்சாபின் படேல் 13 விக்கெட்டையும், ராஜஸ்தானின் சாஹல், மும்பையின் கோட்சி 12 விக்கெட்டையும், பஞ்சாபின் சாம் கர்ரன் 11 விக்கெட்டையும் வீழ்த்தி, Purple தொப்பிக்கான போட்டியில் உள்ளனர்.
விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர். 2024ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஷாம்சி முதலிடமும், புதுவை வர்ஷா இரண்டாமிடமும், தூத்துக்குடி சுபப்பிரியா மூன்றாமிடமும் பிடித்தனர்.
சிறிய படங்கள் வந்தால்தான் சினிமாத் துறை நன்றாக இருக்கும் என நடிகரும், கார்த்திக் சுப்புராஜின் தந்தையுமான கஜராஜ் கூறியுள்ளார். அதுபோல நல்ல கதைக்களம் உள்ள படங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறுக் கேட்டுக்கொண்ட அவர், மகன் பட்ட கஷ்டம் தனக்கு தெரியும், அவரும் அப்படிப் படங்களை எடுத்துத்தான் வந்திருப்பதாக கூறினார். மேலும், சிறிய படங்களே சினிமா துறையில் வேலை வாய்ப்புகளை அதிகமாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.