News April 24, 2024

BREAKING: தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி, பிஹார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட், மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால், குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.

News April 24, 2024

அரசியலமைப்பை வைத்து விளையாடும் காங்கிரஸ்

image

அரசியலமைப்பை வைத்து காங்கிரஸ் விளையாடுவதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், 2004இல் ஆட்சிக்கு வந்ததும் எஸ்சி-எஸ்டி இடஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு அளிக்க காங்கிரஸ் முயன்றதாகத் தெரிவித்தார். இது அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிந்தும் காங்கிரஸ் செய்ததாகவும், அரசியலமைப்பு மீது அக்கட்சிக்கு அக்கறை இல்லையென்றும் மோடி குறிப்பிட்டார்.

News April 24, 2024

தற்கொலைக்கு முன் ஷர்மிளா எழுதிய கடிதம்

image

ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது காதல் கணவர் பிரவீனுடன் வாழ ஆசையாக இருந்தேன். ஆனால், அவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டீர்கள். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நானும் அவன் கூடவே போறேன் என உருக்கமாக கூறியுள்ள ஷர்மிளா, தனது தற்கொலைக்கு பெற்றோரும், சகோதரர்களுமே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News April 24, 2024

மீண்டும் பாஜகவில் இணைவேன்

image

மக்களவைத் தேர்தலில் சீட் தராததால், கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஷிவமொக்கா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் நேற்றைய தினம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து அவர், கட்சியில் இருந்து நீக்கியதற்கு தான் அஞ்சவில்லை என்றும் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜகவில் இணைவேன் என்றும் கூறினார்.

News April 24, 2024

தேர்தல் ஆணையத்தின் நடுநிலை மீது சந்தேகம்

image

தேர்தல் ஆணையத்தின் நடுநிலை மீது பலத்த சந்தேகம் எழுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பலமுறை மத அடிப்படையில் பிரசாரம் செய்ததாகவும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறினார். இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காதது தேர்தல் ஆணைய நடுநிலை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

News April 24, 2024

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஒற்றுமை, மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு நேர் எதிராக மோடியின் பேச்சு அமைந்துள்ளதாக சாடினார். மேலும், தேர்தல் விதிகளை மீறியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராகவும் அவரது பேச்சு உள்ளதாக திருமா குற்றம் சாட்டினார்.

News April 24, 2024

வெற்றி வாய்ப்பு குறித்து இபிஎஸ் ஆலோசனை

image

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் சென்னையின் 3 தொகுதிகள், திருபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

News April 24, 2024

உடல் சூட்டை தணிக்கும் இளநீர்

image

இயற்கை மனிதர்களுக்கு அளித்த கொடைகளில் இளநீரும் ஒன்று. அந்த இளநீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், வயிற்று புண் குணமாகும். வாயில் இருந்து வரும் துர்நாற்றம் முற்றிலும் சரியாகும். இதேபோல், சிறுநீர் கழித்தல் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் நீங்கும். உடல் சூடு தணிந்து சீராகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தி, மூலம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

News April 24, 2024

BREAKING : கைதாகிறார் ராஜேஷ்தாஸ்

image

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு கோரிய ராஜேஷ்தாஸ் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ராஜேஷ்தாஸூக்கு விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் உடனே கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 24, 2024

Fact check.. மோடியின் குற்றச்சாட்டு உண்மையா? (1)

image

முஸ்லிம் பெண்களுக்கு அதிக குழந்தைகள் இருப்பதாகவும், இந்துக்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு அளிக்கப் போவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பாகவும் பிரதமர் மோடி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து Fact check செய்து இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அரசின் புள்ளி விவரங்கள், முஸ்லிம் மதத்தில் குழந்தை பெற்றெடுப்பு விகிதம் குறைந்திருப்பதாக கூறுகிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!