India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதால் தமிழகத்தில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், லாரிகள் போன்றவற்றை எல்லைப் பகுதியிலேயே தீவிரமாகச் சோதிக்கும் அதிகாரிகள், அவற்றின் மீது கிருமி நாசினியும் தெளித்து வருகின்றனர். மேலும், என்னென்ன பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன என்பதையும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி அணி வெற்றிபெற பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை என DC அணி வீரர் வார்னர் கூறியுள்ளார். நடப்பு IPL தொடரில் 3 வெற்றி மட்டுமே பெற்றுள்ள DC அணி 8ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நாங்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என நினைத்தோமோ அங்கு இல்லை. பிளே ஆஃப்க்கு செல்ல இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பதால், வெற்றிபெறக் கடினமாக முயல்வோம் என அவர் கூறியுள்ளார்.
2024-25 கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், மே 6ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான பிறகு பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. கடந்த ஆண்டு 5.8 இலட்சத்திற்கும் அதிகமான மூன்று சக்கர மின்சார வாகனங்களை இந்தியா விற்பனை செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 65% அதிகம். அதே நேரம், சீனாவில் 8% விற்பனை சரிந்து 3.2 இலட்சம் வாகனங்களே விற்பனையாகியுள்ளது. மின்சார வாகனங்களுக்கு அரசு அளித்த மானியம் விற்பனையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மோடி அரசு தரும் நெருக்கடிகளால் இந்திய நாட்டில் இருந்து வெளியேறுவதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் அவனி தெரிவித்துள்ளார். அந்நாட்டு வானொலிக்காக டெல்லியில் தங்கிப் பணியாற்றி வந்த அவனி தியாஸ், X தளத்தில் குற்றச் சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று கூறிக்கொள்ளும் மோடி அரசு, தேர்தலுக்கு முன் தன்னை இந்தியாவில் இருந்து வெளியேறச் செய்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. தேர்தல் பரப்புரை நேரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ₹4 கோடி பணம் சிக்கியது. இதனை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எடுத்துச் செல்வதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் நயினாரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
2017 – 18 சீரிஸ் IV மற்றும் 2018 – 19 சீரிஸ் II ஆகிய தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 5 ஆண்டுகள் நிறைவடைந்த இந்தப் பத்திரங்களை முன் கூட்டியே திருப்பி அளிக்கலாம். கடந்த 18, 19 மற்றும் 22 தேதிகளில் தங்கத்தின் சராசரி விலை அடிப்படையில் ஒரு யூனிட் SGB-க்கு ரூ.7,325ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனது மகனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த படத்தைக் காட்டினால் ₹1 கோடி பரிசு வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். ஜெயவர்தனுக்குத் தனிப்பட்ட அறிவு, ஆற்றல், தைரியம், துணிச்சல் உள்ளதாகக் கூறிய அவர், தனது மகனை அருகில் வைத்துக் கொண்டே பெருமை பேச முடியாது என்றார். முன்னதாக ஜெயவர்தனுக்கு ஆதரவாக, அதிமுகவினர் அதிகமாகப் பிரசாரம் செய்ததாகப் புகார் எழுந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், திரிஷா, ஜெயம் ரவி நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்குப் பதிலாக சிம்பு நடிப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடப்பதாகவும், அதில் கமலுடன் சிம்பு கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தட்டுப்பாடின்றிக் குடிநீர் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், மக்களுக்குத் தட்டுப்பாடின்றிக் குடிநீர் வழங்குவது குறித்து 12 மாவட்ட ஆட்சியர்கள், துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.