News April 24, 2024

தைவானில் 24 மணி நேரத்தில் 247 முறை நிலநடுக்கம்

image

தைவான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 247 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதில் 6.3 ரிக்டர் அளவிலும் ஒருமுறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 20 நாள்களில் 1,095 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 3இல் ஏற்பட்ட நிலநடுக்கமே, கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.

News April 24, 2024

அவசரக்கால நிதி எவ்வளவு சேர்க்க வேண்டும்?

image

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசரக்கால நிதி வேண்டும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். நிலையற்ற வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் அவசரத் தேவை ஏற்படலாம். அப்படி ஏற்படும்போது, உடனடியாகப் பணத்தைத் திரட்டுவது கடினம். அந்த நேரத்தில் அவசரக்கால நிதி பயனுள்ளதாக இருக்கும். மாதத் தேவையில் 6 மடங்கை அவசர நிதியாகச் சேர்த்துவைக்க வேண்டும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News April 24, 2024

நாட்டுக்கான தலைவர் ராகுல் காந்தி

image

நாடு முழுமைக்குமான தலைவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கேரளத்தின் வயநாட்டில் பிரசாரம் செய்த அவர், வரலாற்றின் முக்கியமான தருணத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். நமது நாட்டின் ஆன்மா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தேர்தல் பத்திரம் மூலம் ரூ.13,000 கோடியை நன்கொடையாகப் பெற்ற பாஜக, காங்கிரசின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

News April 24, 2024

₹50 லட்சம் நன்கொடை வழங்கிய சிவகார்த்திகேயன்

image

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ₹50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். பணப் பிரச்னையால் தடைபட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடப் பணி நேற்றுப் பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து முன்னணி நடிகர்கள் பலரும், நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நன்கொடை வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

News April 24, 2024

வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு வேண்டுகோள்

image

மூச்சுத் திணறல், இதயப் பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வர வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் சிவ பக்தர்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில், கோடை வெயில் தாங்காமல் பக்தர்கள் சிலர் உயிரிழக்கும் சூழல் உருவாகிறது. இதனைத் தவிர்க்க, முதியோர், உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள், கோடை வெயில் முடியும் வரை மலையேற வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News April 24, 2024

வாக்குப் பதிவு குறைந்தது பற்றிப் பேசாதது ஏன்?

image

எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் திராவிடக் கட்சிகள், தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்தது பற்றிப் பேசாதது ஏன்? எனத் தமிழிசை வினவியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், வாக்குப்பதிவு குறைந்ததற்கு தேர்தல் ஆணையமே காரணம் எனக் கூறிய அவர், வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.

News April 24, 2024

இனி மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கலாம்

image

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்களிடையே மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லக்சம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவி, இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை 80% முன்கூட்டியே கணிக்கிறது. சீனாவில் நோயாளிகள் 350 பேரிடம் இக்கருவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

அதிமுக நிர்வாகிகள் விஸ்வாசம் இல்லை

image

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விஸ்வாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை மண்டல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பணிபுரியவில்லை” என்று நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

News April 24, 2024

மத்திய அரசு ஏன் இதைச் செய்யக்கூடாது?

image

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வினாத்தாள்களைச் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி மொழிமாற்றம் செய்யலாமே என மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. 22 மொழிகளில் வினாத்தாள்களை வழங்கக்கோரிய வழக்கில், AI மூலம் மிக எளிதாக மொழிமாற்றம் செய்யலாம். அது 100% சரியாக இல்லையென்றால், மனிதர்களைக் கொண்டு திருத்தலாம் எனக்கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

News April 24, 2024

தேனின் மருத்துவப் பயன்கள்…

image

*இரைப்பை அழற்சி, வயிற்றுப் புண், பித்தப்பை நோய்களுக்குத் தேன் மருந்தாக உள்ளது. *எலுமிச்சம்பழச் சாறுடன் தேனைக் கலந்து பருகினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலைவலி சரியாகும். *கண்பார்வை தெளிவாகத் தெரியத் தேனுடன் வெங்காயச் சாரைக் கலந்து அருந்தலாம். *சாப்பாட்டிற்கு முன் 2 ஸ்பூன் தேனைத் தொடர்ந்து உட்கொண்டால் வயிற்றுப் புண் குணமாகும். *தேனோடு பால் கலந்து குடித்தால் பித்த நீர் தொந்தரவுகள் குறையும்.

error: Content is protected !!