News April 24, 2024

Hக்கும் Lக்கும் இடையே அப்படி என்னதான் இருக்கிறது?

image

சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அடிக்கடி எதையாவது ட்ரெண்ட் செய்வது வழக்கம். அந்தவகையில் இன்று காலை முதல் இந்தியா முழுக்க அனைவரும் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது உங்கள் கீ போர்டில் Hக்கும் Lக்கும் இடையே இருப்பதைப் பாருங்கள் என்பதுதான் அது. வேறு ஒன்றுமில்லை Hக்கும் Lக்கும் இடையே இருப்பது JK. ‘Just Kidding’ என்பதைத்தான் இவ்வாறு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

News April 24, 2024

ஆன்லைன் கல்வியில் மோசடி.. UGC எச்சரிக்கை

image

ஆன்லைன் படிப்பு தொடர்பாகப் போலிகளிடம் இருந்து மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலை., மானியக் குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் கல்வி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி மையங்களின் விவரங்களை deb.ugc.ac.in என்ற இணையத்தளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

ஒப்புகைச் சீட்டுகளை முழுவதும் எண்ண முடியுமா?

image

விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய மனு நாளை தள்ளுபடியாகவே வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது வாக்குச் சீட்டுகளை எண்ணுவதற்கு ஒப்பானது. சுமார் 96 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில், அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி முடிவுகளை அறிவிக்க 15 நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

News April 24, 2024

வாக்கு வங்கிக்காகவே இப்படிப் பேசுகின்றனர்

image

INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் எனக் கூறிய ப.சிதம்பரத்தின் எண்ணம் பலிக்காது என்று அமித் ஷா கூறியுள்ளார். கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், சிஏஏ திருத்தச் சட்டம் வேண்டாம் எனக்கூறும் சிதம்பரம், சிஏஏ சட்டத்தின் குறைபாடுகளைக் கூறவே இல்லை. சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்தவே காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு பேசி வருவதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.

News April 24, 2024

தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு

image

விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. மக்களவைத் தேர்தலின்போது, EVM எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி ஒப்பிடக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

News April 24, 2024

உறக்கம் வரவில்லையா… இதோ சில டிப்ஸ்

image

உறங்க செல்வதற்கு முன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது உங்களை நிதானமாக்கி மன அமைதியைத் தரும். கால்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவற்றைத் தளர்த்தி நேராக வைத்துப் படுக்கலாம். இதற்குப் பிறகு உறங்க முயற்சி செய்யலாம். படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போனை தள்ளி வையுங்கள். நிறைவான தூக்கத்திற்கு அறையைக் காற்றோட்டமாகவும், இருட்டாகவும் வைத்திருக்க வேண்டும்.

News April 24, 2024

ஏர்டெல் ரோமிங் திட்டத்தை 184 நாடுகளில் பயன்படுத்தலாம்

image

உலகில் உள்ள 184 நாடுகளில் பயன்படுத்தும் வகையில் சர்வதேச ரோமிங் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிற நாடுகளுக்குச் செல்வோர் வசதிக்காக, ஒரு நாளைக்கு ₹133 முதல் ₹2998 வரை பயணத்தின் கால அளவைப் பொறுத்துத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலமாக இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

IPL: 210 ரன்கள் குவித்தது CSK

image

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் அடித்தனர். வழக்கம்போல அதிரடியாக ஆடிய துபே இன்று 7 சிக்ஸர்கள் விளாசினார். இதையடுத்து LGS அணிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. LSG சார்பில் ஹென்றி, மோசின் கான், யஷ் தாகூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

News April 24, 2024

சதம் விளாசினார் ருதுராஜ்

image

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், 56 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 103 ரன்களை எட்டினார். சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி தற்போது வரை 18 ஓவர்களில் 178/3 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

News April 24, 2024

விடுப்பு வழங்க மறுக்கக் கூடாது

image

பணிபுரியும் பெண்களுக்குக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்க மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இமாச்சலைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை, தனது குழந்தையைக் கவனிக்க விடுப்பு வழங்க மாநில அரசு மறுப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், தாய்மார்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பது, அவர்களைப் பணியை விட்டே வெளியேற்றுவதற்குச் சமம் எனக் கூறியுள்ளது.

error: Content is protected !!