India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் பிறகும் கூட வடலூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘சொத்து மறுபகிர்வு’ பற்றி மக்களுக்கு பிரியங்கா காந்தி விளக்கமளிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினர் செல்வத்தை உருவாக்குவதைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் சிலரது செல்வத்தைக் கட்டாயப்படுத்தி பறித்து, அதனை மற்றவர்களுக்கு பகிர்வதைப் பற்றியே சிந்திக்கின்றனர் எனக் கூறினார்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? என்பதை ஆராய, பாறை மற்றும் மண் மாதிரிகளைப் பூமிக்கு கொண்டுவர நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.91,800 கோடி வரை செலவாகும் எனக் கூறும் விஞ்ஞானிகள், செலவை குறைப்பதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகின்றனர். செவ்வாயில் 380 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த ஏரி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஆன்லைன் சேவையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் புதிய கிரெடிட் கார்டு வழங்கவும் தடை விதித்துள்ளது. இருப்பினும், பழைய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க எந்தத் தடையும் இல்லை.
‘வேட்டையன்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் உள்ளிட்டோர் கூறிவரும் அரசியல் கருத்துகளால் ரஜினிகாந்த் பதற்றமாகி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. INDIA கூட்டணிக்கு ஞானவேல் ஆதரவு தெரிவித்தது, பாஜகவுக்கு எதிராக ஒளிப்பதிவாளர் SR கதிர் பேசியது போன்ற சம்பவங்கள் ரஜினியை சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டதாம். இதனால், பட ரிலீஸ் வரைக்கும் அமைதியாக இருக்குமாறு படக்குழுவை ரஜினி கேட்டுக் கொண்டுள்ளாராம்.
திரவ நைட்ரஜன் உடலுக்குள் செல்லும்போது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். உடல் உறுப்புகளை உறைய வைத்து மூச்சடைப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். திரவ நைட்ரஜன் முழுவதும் வெளியேறிய பிறகு அந்த உணவை உட்கொண்டால் எந்தப் பாதிப்பும் வராது. ஆனால், அதிகளவு திரவம் உடலுக்குள் சென்றால் உடல் திசுக்களை உறைய வைத்து உடலுறுப்புகளைச் செயலிழக்க செய்யும் ஆபத்து உண்டு.
மணிப்பூரின் எல்லையையொட்டியத் தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை மூன்று இடங்களில் குண்டு வெடித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இம்பால் பள்ளத்தாக்கின் முக்கியமான சாலையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் எந்த அமைப்புகளும் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த பின்னர் ஜூன் மாதம் உலகக் கோப்பை டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக, தான் தேர்வு செய்துள்ள அணியின் பட்டியலை இர்பான் பதான் வெளியிட்டுள்ளார். அதில், ரோஹித் ஷர்மா(C), ஜெய்ஷ்வால், கோலி, சூர்யகுமார், ரிஷப் பந்த் (WK), துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ், ரவி பிஷ்னோய் (அ) சாஹல், கில் (அ) சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகனச் சான்றை தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பும் பணி பிப்.28இல் தொடங்கப்பட்டது. இந்நிலையில், மார்ச் மாதம் மட்டும் 2.41 லட்சம் ஓட்டுநர் உரிமம், வாகனச்சான்று அனுப்பியதில் 99% உரியவரிடம் சேர்க்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை விளக்கமளித்துள்ளது. அத்துடன், மீதமுள்ள ஒரு சதவீதமும் சரியான விலாசமின்றி திரும்பி வந்துள்ளது. அதனால், உரிய முகவரியை குறிப்பிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
திரவ நைட்ரஜன் என்பது மைனஸ் 190 டிகிரி வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜன். நிறமற்ற, வாசனையற்ற நைட்ரஜன், திரவ நிலையில் இருந்து வாயுவாக மாறும் தன்மைக் கொண்டது. இது ஐஸ்கிரீம், இறைச்சி வகைகளைப் பாதுகாக்க பயன்படுகிறது. இது வாயுவாக மாறும்போது அதன் தன்மை மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கும் மருத்துவர்கள், நைட்ரஜன் வாயு உணவுப் பொருள்கள் மூலம் நேரடியாக உடலுக்குள் செல்வது பேராபத்து என்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.