India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2016 – 2020 வரை KKR அணிக்காக விளையாடியதை நினைத்து தான் தற்போது வருந்துவதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொல்கத்தா அணியில் ஆடிய காலத்தில் எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. ஆனால், அறிவுரைக் கூறத்தான் ஆளில்லை. தோனிக்கு பிறகு யாருமே என்னை வழிநடத்தவில்லை. அப்போது எனக்கு ஆதரவு வழங்காமல் மோசமாக நடத்தி, KKR அணி கழற்றிவிட்டதாகக் கூறினார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கை பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறை முடித்துவைத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாராமதி தொகுதியில் சுனேத்ரா போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் மீதான கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் அவர் மீது குற்றமில்லை எனவும் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஷுப்மான் கில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் DC அணி பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகள் விளையாடியுள்ளன. அவற்றில், GT 4 வெற்றியும், DC 3 வெற்றியும் பெற்றுள்ளன. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
எழும்பூர் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதில் நயினார் நாகேந்திரனிடம் ED விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ராகவன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், பணம் பறிமுதல் செய்ததை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சேர்க்க முடியாது என ED தெரிவித்தது. இதையடுத்து விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனக்கூறிய உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
நடிகர் ஜெயம் ரவி மறைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ராஜா (33). ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த இவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த ஜெயம் ரவி இன்று அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தப் பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்துகொண்ட அவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கியிருக்க முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த நிதியாண்டின் 4ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.5% சரிந்து ரூ.2,561 கோடியாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் நிகர லாபம் ரூ.2,600 கோடியாக இருந்தது. வருவாயைப் பொறுத்தமட்டில் ரூ.15,373 கோடியில் இருந்து ரூ.15,441 கோடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே, பங்கு ஒன்றுக்கு ரூ.24 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து அட்லி இயக்கவிருக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக உள்ள இப்படத்திற்கு அல்லு அர்ஜூனுக்குச் சம்பளம் கொடுக்காமல், பிசினஸ் பார்ட்னராகச் சேர்க்க சன் பிக்சர்ஸ் தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாம். அதே போல, அட்லியையும் தயாரிப்பு பார்ட்னராக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.
குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்து TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முதல்நிலைத் தேர்வு ஒன்றாகவும், பிரதானத் தேர்வு தனியாகவும் நடைபெற உள்ளது. குரூப் 1, 2, 4 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் ஒருங்கிணைந்த தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இதில், 6244 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9இல் நடைபெறுகிறது.
ஆக்சிஸ் வங்கி கடந்த நிதியாண்டின் 4 ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் ரூ.7,129 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய காலாண்டின் ரூ.6,071 கோடியுடன் ஒப்பிடுகையில் 17% அதிகம். நிகர வட்டி வருவாய் 4.06% அதிகரித்து ரூ.13,089 கோடியாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.1 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.55,000 கோடி நிதி திரட்ட வங்கி குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.