India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய வணிகக் கடற்படையில் 4,000 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. Sea Man , Deck & Engine Rating உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-27. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. தேர்வு: நேர்காணல். ஊதிய வரம்பு: ₹35,000 – ₹55,000 /-. கூடுதல் தகவல்களுக்கு <
கோவை அதிமுகவின் கோட்டை, திமுக, பாஜக வெல்ல வாய்ப்பு இல்லை என அதிமுகவின் ஐ.டி.விங் துணைச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளை மிரட்டி திமுக, தன்னுடன் வைத்திருப்பதால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக கூட்டணி உடையும் எனக் கூறிய அவர், அண்ணாமலை ட்விட்டரில் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக்கொள்ளலாமே தவிர, கள அரசியலில் வெற்றிபெற முடியாது; அவர் படுதோல்வி அடைவார் எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் இருந்தபோது அவரது உத்தரவின்பேரில், சச்சின் பைலட்டின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக அவருடைய முன்னாள் உதவியாளர் லோகேஷ் ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார். 2020இல் அசோக் கெலாட், சச்சின் இடையே மோதல் வெடித்து, பிறகு சமாதானமாகினர். இக்காலகட்டத்தில் பைலட்டின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவரது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகவும் ஷர்மா தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் போன்றவர்களின் விமர்சனத்தை கண்டுக்கவே மாட்டேன் என்று ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜித்து மாதவன் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், ஒரு படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என படைப்பாளிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. ஒரு விஷயத்தை வைத்து ஒரு மாநிலத்தையே மோசமென பொதுமைப்படுத்திச் சொல்லக்கூடாது. ஏன் இப்படி சொல்கிறார்கள் என்றுத் தெரியவில்லை எனக் கூறினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சென்னை திரும்பினார். கனடாவில் இருந்து விமான மூலம் சென்னை வந்த அவருக்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் ஊக்கம் தனக்கு உறுதுணையாக இருந்தது. இந்தாண்டு இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன் போட்டியில், நிச்சயம் வெல்வேன் எனத் தெரிவித்தார்.
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைப் போக்க சந்தன பானகத்தைப் பருகலாமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. சந்தன பானகத்தை செய்வது எப்படி என பார்க்கலாம். முதல் நாள் இரவு மண்பானைத் தண்ணீரில் ஊறவைத்த செஞ்சந்தனத்துடன் பனை வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்தால் பானகம் ரெடி. இப்பானகத்தைக் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் நீங்குமாம்.
2008 பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்காக சோனியா காந்தி அழுததாக ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார். பீகார் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நட்டா, கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்காக சோனியா கண்ணீர் விட்டார் என காங்கிரஸ் தலைவர்களே கூறியதாகத் தெரிவித்தார். தீவிரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார், இதன் பின்னணி என்ன என்றும் அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
உ.பி., மாநிலம் ஹத்ராஸின் பாஜக எம்பி ராஜ்வீர் திலர் (65) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்குப் பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2019இல் ஹத்ராஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவருக்கு 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சீட் கொடுக்க மறுத்துவிட்டது. அவருக்கு பதில், அனூப் பால்மிகி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்படி 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி, 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு செப்.28ஆம் தேதி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி, 29 பணியிடங்களுக்கான குரூப் 1 பி, குரூப் 1 சி தேர்வுகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள PVR-INOX திரையரங்குகளில், இனிமேல் விளம்பரங்கள் திரையிடப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட இடைவேளையின் போது விளம்பரங்கள் இருக்காது. படங்களின் டிரைலர்கள் மட்டுமே திரையிடப்படும். படம் தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும் விளம்பர நேரத்தை, 10 நிமிடங்களாகக் குறைப்பதன் மூலம் கூடுதல் காட்சிகளைத் திரையிட்டு விளம்பர வருவாய் இழப்பை ஈடுகட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.