News April 25, 2024

CSKvsSRH: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

image

CSK-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு, CSK மற்றும் பேடிஎம் இன்சைடர் இணையதளங்களில் தொடங்க உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமுமின்றி, ₹1,700, ₹2,500, ₹3,500, ₹4,000, ₹6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள CSK அணி, சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

News April 25, 2024

நடிகர் அஜித்குமாரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

image

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது ஒரு படத்தில் நடிக்க ₹104 கோடி வரை ஊதியம் வாங்குகிறார். அவர் நடித்த முதல் படம், அமராவதி என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால், சுரேஷ், நதியா நடிப்பில் வெளியான என் வீடு என் கணவர் திரைப்படமே அவர் நடித்த முதல் படமாகும். அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு ₹2,500 ஊதியமாக வழங்கப்பட்டது.

News April 25, 2024

பிடிபட்டவர்களைத் தெரியும்; பணம் என்னுடையதல்ல

image

வரும் மே 2 ஆம் தேதி தாம்பரம் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராவேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ₹200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதலான நிலையில் ₹4 கோடி குறித்து மட்டும் விசாரிக்கின்றனர். அந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிடிபட்ட 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். அவர்களை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர் எனக் குற்றம்சாட்டினார்.

News April 25, 2024

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு?

image

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் ஆண்டுதோறும் 10 ரஞ்சி போட்டிகளில் விளையாடினால், ரூ.1 கோடி வரை சம்பளம் உயர்த்தப்படும். இது உள்நாட்டு கிரிக்கெட் மீதான முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடாதது சர்ச்சையானது.

News April 25, 2024

மாதம் ₹29ஆக கட்டணத்தை குறைத்த ஜியோ சினிமா

image

ப்ரீமியம் ஓடிடி சேவை கட்டணத்தை ஒரு நாளுக்கு ₹1க்கும் கீழ் (மாதம் ₹29) ஜியோ சினிமா குறைத்துள்ளது. ப்ரீமியம், இலவசம் என 2 சேவைகளை ஜியோ சினிமா அளிக்கிறது. இதில் ப்ரீமியத்திற்கு மாதக் கட்டணமாக ₹99ம், வருட கட்டணமாக ₹999ம் நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் netflix, amazon prime ஓடிடிக்கு போட்டியாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இச்சேவையை ஒரேநேரத்தில் 4 பேர் பயன்படுத்த ரூ.89 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

நடிகை தமன்னாவுக்கு சைபர் போலீஸ் சம்மன்

image

2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) செயலியில் ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, நடிகை தமன்னாவை நேரில் விசாரிக்க மகாராஷ்டிரா சைபர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சட்ட விரோத ஸ்ட்ரீமிங்கால், Viacom நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.

News April 25, 2024

வீடுகளில் மின் கட்டணத்தை குறைக்க எளிய வழிகள்

image

வெயில் காலத்தில் மின்விசிறி, ஏசி பயன்பாடு கூடியிருப்பதால், மின்கட்டணம் அதிகரிக்கக்கூடும். இதை கீழ்காணும் வழிகளைக் கடைபிடித்தால் குறைக்கலாம். 1) பழைய விளக்குகளை அகற்றிவிட்டு எல்இடி பல்புகளைப் பொருத்தவும் 2) ஃப்ரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்சாதனங்களை 5 ஸ்டார் உள்ளதாக வாங்கவும் 3) பயன்படுத்தாத நேரத்தில் மின்சாதனங்களை ஸ்விட்ச் ஆப் செய்யவும் 4) ஏசியை 24 டிகிரி டெம்ப்ரேச்சரில் பயன்படுத்தவும்.

News April 25, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைவு

image

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கும், கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.86,000க்கும் விற்பனையாகிறது.

News April 25, 2024

அலுமினியம் பாத்திரத்தில் சமைக்கலாமா?

image

அலுமினிய பாத்திரங்களில் சமையல் செய்து உட்கொள்வதால் மூளை செயலிழப்பு, நியூரோடாக்ஸிசிட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என ஸ்லோவாக் நச்சுயியல் சங்கம் அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கையில், அதிக அமிலத்தன்மை கொண்ட தக்காளி, வினிகர் போன்றவற்றை அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் உணவுகளில் வேதியல் மாற்றம் ஏற்படும். அந்த உணவை உண்பதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News April 25, 2024

கடைசி ஓவர்களில் சொதப்பி விட்டோம்

image

பந்துவீச்சில் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை என குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். தோல்விக்கான காரணம் குறித்து பேசிய அவர், டெல்லி அணியை 200 – 210 ரன்களுக்குள் சுருட்டுவோம் என நினைத்தேன். ஆனால், கடைசி ஓவர்களில் சொதப்பி விட்டோம். சிறிய மைதானம் என்பதால், அதிக ரன்களை கொடுத்து விட்டோம். மேலும், இம்பாக்ட் பிளேயர் விதி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது எனக் கூறினார்.

error: Content is protected !!