India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி “இந்திய ஜனநாயக புலிகள்” என்ற புதிய கட்சியை தொடங்கி, மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணையவுள்ளார்.
தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்று பாதிப்பு குறைந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் 104 நம்பிக்கை மையங்களை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த இடங்களில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் எச்.ஐ.வி & பால்வினை நோய் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 2,163 நம்பிக்கை மையங்கள், 64 சிகிச்சை மையங்கள், 34 ஆற்றுப்படுத்துதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
2023 ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு நகரங்களில் 28.20 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், போர், காலநிலை & பொருளியல் நெருக்கடி ஆகிய காரணங்களால் பட்டினியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5ஆவது ஆண்டாக அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023இல் 2.40 கோடியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி 300 ரன்கள் குவிக்குமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஹைதராபாத் அணி, 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடந்த போட்டியில், 287/3 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. இன்றைய போட்டியில் 300-ஐ கடக்குமா?
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் ராகுல் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 தேர்தலில் அமேதி, வயநாட்டில் போட்டியிட்ட ராகுல், அமேதியில் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் வயநாட்டில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள அவர், அமேதியிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், 26ஆம் தேதிக்கு பிறகு இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
விருதுநகர் தொகுதி காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மாணிக்கம் தாகூர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறி மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் ஒருவாரத்தில் முக்கிய முடிவெடுப்பதாகக் கூறியுள்ளது.
2023 ஏப்ரல் – 2024 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 8.8% சரிந்துள்ளது. வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்திய வேளாண் பொருள்களின் GDP மந்தநிலையைக் கண்டது. முந்தைய ஆண்டில் 4,790 கோடி டாலராக இருந்த வேளாண் பொருள்களின் ஏற்றுமதி தடை உள்ளிட்ட காரணங்களால் கடந்த நிதியாண்டில் 4,370 கோடி டாலராக சரிந்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்கின் விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2015இல் மணல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவின் கீழ் சிவசங்கர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்துவருகிறது.
சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. இப்படம் உறுதி செய்யப்பட்டால், ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. துருவ் விக்ரம், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கு பேக்குகளில் கட்டுக் கட்டாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா பணம் கொண்டு வந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், வாக்காளர்களுக்கு கொடுக்க டெல்லியிலிருந்து 5 பேக்குகளில் நட்டா பணம் கொண்டு வந்ததாகவும், அவரிடம் சோதனை நடத்தினால் உண்மை நிருபணமாகும் என்றும் தெரிவித்தார். விசாரணை அமைப்புகள் வெளிப்படையாக நட்டாவுக்கு உதவுவதாகவும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.