News April 25, 2024

IPL போட்டியில் அதிக ரன் கொடுத்த பவுலர்கள்

image

▶மோஹித் ஷர்மா (GT) – 73 ரன்கள் vs டெல்லி ▶பசில் தம்பி (SRH) – 70 ரன்கள் vs பெங்களூரு ▶யாஷ் தயாள் (GT) – 69 ரன்கள் vs கொல்கத்தா ▶ரீஸ் டாப்லி (RCB) – 68 ரன்கள் vs ஹைதராபாத் ▶இஷாந்த் சர்மா (SRH) – 66 ரன்கள் vs சென்னை ▶முஜீப் உர் ரஹ்மான் (PBKS) – 66 ரன்கள் vs ஹைதராபாத் ▶அர்ஷ்தீப் சிங் (PBKS) – 66 ரன்கள் vs மும்பை ▶மாபாகா (MI) – 66 ரன்கள் vs ஹைதராபாத் ▶உமேஷ் யாதவ் (DC) – 65 ரன்கள் vs பெங்களூரு

News April 25, 2024

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி

image

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படமானது, அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விடுதலை 2, மகாராஜா, ட்ரைன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

சற்றுமுன்: பள்ளிகளுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை?

image

கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதிக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமா (10 நாள் கூடுதல் விடுமுறை) என அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார். முதலில் 9 – 12ஆம் வகுப்பு வரையும், 2ஆம் கட்டமாக 1 – 8ஆம் வகுப்பு வரையும் பள்ளிகளைத் திறக்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 25, 2024

‘வீர தீர சூரன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது

image

‘சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மதுரையில் நடக்கும் முதல்கட்ட படப்பிடிப்பில், விக்ரமுடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர். நேரடியாக, படத்தின் 2ஆம் பாகத்தை முதலிலும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News April 25, 2024

ஓபிசிகளுக்கான இடஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ்

image

கர்நாடகாவில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்து கொண்டுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், குறிப்பிட்ட ஒரு மதத்தினரை திருப்திப்படுத்துவதை காங்கிரசார் தனது காயாக மீண்டும் பயன்படுத்துவதாகவும், கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஓபிசிக்களாக அறிவித்து, கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை ரகசியமாக பறித்து விட்டதாகவும் சாடினார்.

News April 25, 2024

4 கிலோ தங்க நகைகளை அணியும் அதிசய மனிதர்

image

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் செங்கர், தினமும் 4 கிலோ தங்க நகைகளை அணிவது மக்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. கான்பூரை சேர்ந்த மனோஜ் செங்கர், தங்கம் மீதான ஆசையால், அதை நகைகளாக செய்து அணிகிறார். கொரோனா காலத்தில் தங்க மாஸ்க் செய்து அணிந்திருந்தார். இதேபோல் 4.5 கிலோ எடையில் வெள்ளி காலணிகளை வைத்துள்ள போதிலும், யோகி ஆதித்யநாத் பிரதமராகும் வரை அணிவதில்லை என அவர் உறுதிபூண்டுள்ளார்.

News April 25, 2024

வளர்ச்சிக்கு எதிரானது காங்கிரஸ்

image

வளர்ச்சிக்கு எதிரானது காங்கிரஸ் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் மொரேனா பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவுக்கு நாடு முதன்மையானது என்றும், மொரேனா மக்கள் எப்போதும் நாட்டை முதன்மையானதாகக் கருதுவோரையே ஆதரித்துள்ளனர் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் சம்பல் பகுதியானது, மோசமான நிர்வாகத்தின் அடையாளமாகக் காணப்பட்டதென்றும் அவர் குறிப்பிட்டார்.

News April 25, 2024

படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள்

image

‘ரத்னம்’ படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். ரத்னம் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் படத்தை வெளியிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் அடையாளம் தெரியாத நபர் கடிதம் கொடுத்து முடக்குவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பேச மறுப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

image

பிரதமர் மோடி, ராகுல் ஆகியோரின் சர்ச்சை பேச்சு குறித்து 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க பாஜக மற்றும் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மோடிக்கு எதிராக காங்கிரசும், ராகுலுக்கு எதிராக பாஜகவும் புகார் அளித்தன. இதை பதிவு செய்து கொண்ட தேர்தல் ஆணையம், 2 கட்சிகளின் தலைவர்களும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News April 25, 2024

ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு

image

உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 1952 முதல் காங்கிரஸ் கோட்டையாக திகழும் ரேபரேலி தொகுதி எம்பியாக இருந்த சோனியா காந்தி, மாநிலங்களவை எம்பியாக தேர்வானார். இதனால் ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு பின், இது குறித்தான அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!