India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (NEET-UG) தேர்வு, வரும் மே மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில் உள்ள புகைப்படங்களை இன்று மாற்றிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இரவு 11.59 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும்.
கோடையில் சீரான மின் விநியோகம் வழங்குவது, மின் தடை தொடர்பாக மின்சாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாநிலத்தில் போதுமான மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், விநியோகத்தில் ஏற்படும் சிக்கலால் மின் தடை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரவு 10 மணிக்கு மேல் அதிகளவு மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் மின்மாற்றிகளில் பிரச்னை ஏற்படுவதாகவும் கூறினர்.
திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களை, நடிகர் விஷால் காட்டமாக விமர்சித்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், தனது ‘ரத்னம்’ படத்தை வெளியிட முடியாமல் இருப்பது உங்கள் அனைவருக்கும் வெட்கக்கேடு என்றும், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய மக்களை நிறம், மதம், உணவு முறைகளால் பிரதமர் மோடி வேறுபடுத்தி பார்க்கக்கூடாது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அதிக குழுந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு இந்துக்களின் சொத்துகளை பகிர்ந்தளிக்குமென மோடி கூறியிருந்தார். இதனைக் கண்டித்த அவர், வெறுப்பைத் தூண்டி நாட்டை மோடி துண்டாட முயற்சிக்கிறார் என்றார்
கிரிக்கெட்டை பொறுத்தவரை LSG அணியைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரன்தான் அபாயகரமான வீரர் என்று CSK முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “டி20 போட்டியில் பூரனால் வேகப்பந்து & சுழற்பந்து வீச்சு என எந்த வகையான பந்துவீச்சுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாட முடியும். பூரனை எப்படி பயன்படுத்தினால் நல்லதோ அந்த வகையில் LSG அணி பயன்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.
எலான் மஸ்க் போல டீப் ஃபேக்கால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவுடன் ரொமான்ஸ் செய்த தென்கொரிய பெண் ₹41 லட்சத்தை இழந்துள்ளார். ஜியாங் ஜி சன்னின் இன்ஸ்டாகிராம் கணக்கு, மஸ்க் பெயரில் இருந்த போலி கணக்குடன் சேர்க்கப்பட்டுள்ளது. உண்மை என நம்பி, அதிலிருந்து வந்தது டீப் ஃபேக் வீடியோ என தெரியாமல் சேட் செய்துள்ளார். காதலிப்பதாக கூறியதால், வங்கிக் கணக்கில் ₹41 லட்சம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வாக்குகளுடன் 5% விவிபேட் சீட்டை ஒப்பிட்டு பார்க்க வேட்பாளர்கள் கோரலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவின்படி 2 மற்றும் 3ஆவது இடத்திலுள்ள வேட்பாளர்கள், 7 நாள்களில் கோரிக்கை வைக்கும்பட்சத்தில், செலவினத் தொகையை பெற்றுக்கொண்டு அதை சரி பார்க்க வேண்டும். இதில் முறைகேடு உறுதியானால், அந்தத் தொகையை திருப்பி வழங்குமாறும் தெரிவித்தது.
மக்களவைத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுத்த பணத்தை பகிர்வது தொடர்பாக பல இடங்களில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏஜென்ட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாவட்ட நிர்வாகிகளே எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், கோபத்திற்கு ஆளான பூத் ஏஜெண்டுகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருசில இடங்களில் இவ்விவகாரம் அடிதடியிலும் முடிந்துள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்டோர் மீதான வழக்கின் தீர்ப்பை ஏப்.29ஆம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக நிர்மலா தேவிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருந்த நிலையில், நிர்மலா தேவி ஆஜராகததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்த இந்திய செஸ் சம்மேளனம் முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டியை இந்தியாவில் நடத்த சர்வதேச செஸ் சம்மேளனம் அனுமதித்தால், தமிழ்நாட்டில் போட்டி நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனுடன் கேன்டிடேட் செஸ் போட்டியில் வென்ற தமிழக வீரர் குகேஷ் மோதவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.