India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக கைதான மூவரிடம் விசாரணை நடத்தியபோது, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கில் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 60% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அசாம் – 70.7%, பீஹார் – 53%, சத்தீஷ்கர் – 72.1%, ஜம்மு காஷ்மீர் – 67.2%, கர்நாடகா – 63.9%, கேரளா – 64%, ம.பி. – 54.8%, மகாராஷ்டிரா – 53.5%, மணிப்பூர் – 76.1%, ராஜஸ்தான் – 59.2%, திரிபுரா – 76.2%, உத்தரப் பிரதேசம் – 52.6%, மேற்கு வங்கம் – 71.8% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா பெரிய விஷயமில்லை என நடிகர் ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், தியேட்டரில் படங்களைப் பார்த்து விட்டு அங்கேயே படம் பற்றிய கருத்தைப் பேசுங்கள் எனக் கூறியுள்ளார். வீட்டுக்குள் உட்கார்ந்து நடிகர்கள் குறித்துப் பேச வேண்டியமில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அதைத் தாண்டி வாழ்க்கையில் நிறையக் கடமைகள் இருப்பதாக அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவுபெற்றது. 6 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புறநகர் மணிப்பூர் தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. முதல்கட்ட தேர்தலில் வன்முறை நிகழ்ந்ததால், 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, உக்ருல் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஆமை வேக பேட்டிங் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. நேற்றைய போட்டியில் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். சக வீரரான பட்டிதார் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதனை விமர்சித்திருக்கும் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இப்படியான சாதாரண ஆட்டத்தை கோலியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். உங்களது கருத்து என்ன?

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 2இல் லேசான மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன. தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி இன்று 150 புள்ளிகளை இழந்து 22,419 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 609 புள்ளிகளை இழந்து 73,730 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.