News April 27, 2024

கூகுளில் சுந்தர் பிச்சையின் வரலாறு

image

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் சேர்ந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தனது 31ஆவது வயதில் அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளராகப் பணியில் சேர்ந்த அவர், கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு, கூகுள்+, மேப்ஸ், கூகுள் ஆட்ஸ், கூகுள் சர்ச் உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்களில் பங்கு வகித்துள்ளார். இந்தியரான இவர், 2015ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

News April 27, 2024

மீண்டும் திரைக்கு வரும் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’

image

விஜய் சேதுபதியின் சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012இல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக, விஜய், ரஜினி உள்ளிட்டோரின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

News April 27, 2024

மக்கள் மடிவதை அரசு வேடிக்கை பார்க்கிறது

image

கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோவதைத் தமிழக அரசு வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மக்கள் மீது அக்கறை இல்லாமல் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை பெற்று மக்களைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 27, 2024

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது

image

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது எனக் கூறி மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக ₹37,907 கோடி வழங்கக் கோரிய நிலையில், நீதிமன்றத்தை நாடிய பிறகு ₹276கோடி அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்

News April 27, 2024

பீர் குடித்தால் உடலுக்குக் குளிர்ச்சியா?

image

வெயில் காலத்தில் பீர் குடிப்பது உடல் சூட்டைத் தணிக்கும் என்ற வாதத்தைப் பலர் முன் வைக்கின்றனர். ஆனால், இது தவறான புரிதல் என்கிறார்கள் கல்லீரல் மற்றும் குடல் சிகிச்சை மருத்துவர்கள். பீர் உள்ளிட்ட மதுபானங்களில் ஆல்கஹால் இருப்பதால், குளிர்ச்சியாகப் பருகினாலும், அறை வெப்பநிலையில் பருகினாலும் உடலுக்குக் கேடு தரும் எனக் கூறுகின்றனர். பீர் குளிர்ச்சி தரும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையாம்.

News April 27, 2024

பாஜகவின் நிலைமை மேலும் மோசமாகும்

image

நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டத் தேர்தல்களில் பாஜகவின் நிலைமை மேலும் மோசமாகும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். முதல் இரண்டு கட்டத் தேர்தலில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என பாஜகவினரே கூறுவதாக விமர்சித்துள்ளார்.

News April 27, 2024

யெஸ் வங்கியின் வாராக் கடன்கள் குறைந்தது

image

யெஸ் வங்கி, கடந்த நிதியாண்டின் 4ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 123% அதிகரித்து ரூ.451 கோடியாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.202 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாயைப் பொறுத்தமட்டில் 2% அதிகரித்து ரூ.2,153 கோடியாக உள்ளது. இதனிடையே, வாராக் கடன்கள் (NPA) 2.2%இல் இருந்து 1.7%ஆகக் குறைந்துள்ளன.

News April 27, 2024

Fact Check: இது பிரியங்கா காந்தியின் பங்களாவா?

image

இமாச்சலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சட்ட விரோதமாக சொகுசு பங்களா வாங்கியுள்ளதாகப் படத்துடன் கூடிய தகவல் பரவி வருகிறது. இந்த பங்களா ‘செல்வம் மறுபகிர்வு’ திட்டத்தில் வருமா? எனவும் பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அந்தப் படம் குறித்து ஆய்வு செய்ததில் அது பிரியங்காவின் பங்களா என்பது தெரியவந்துள்ளது. ஆனால், சட்ட விரோதமாக வாங்கப்படவில்லை என்பது உறுதியாகிறது.

News April 27, 2024

அருந்ததி நாயருக்குத் தொடர்ந்து சிகிச்சை

image

தமிழில் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த அருந்ததி நாயர் மார்ச் 14ஆம் தேதி விபத்தில் சிக்கினார். இதையடுத்து ஐசியூவில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நிலையில் தற்போது வரை முன்னேற்றம் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேதனையில் உள்ள அவரது குடும்பத்தினர் அருந்ததியின் மருத்துவச் செலவை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சிலரது உதவியுடன் செய்து வருவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

News April 27, 2024

மாட்டிறைச்சியை அனுமதிக்க விரும்புகிறது காங்கிரஸ்

image

நாம் தாயாக வணங்கும் பசுவைச் சிறுபான்மையினர் இறைச்சியாக உண்ண காங், அனுமதி அளிக்க உள்ளது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரத்தை வழங்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காங்., பசுவதையைத் தடையின்றி அனுமதிக்கப் போகிறார்கள் என விமர்சித்துள்ளார். இதன்மூலம் நாட்டைப் பிளவுபடுத்த காங்., சதி செய்வதாகச் சாடியுள்ளார்.

error: Content is protected !!