India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பால், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியை 20% உயர்த்தியதாக ஆவின் நிறுவனம் கூறியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், தடையின்றி அனைத்துப் பொருள்களும் கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 280க்கும் அதிகமான பால் பொருள்கள்களை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.
உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் அமெரிக்காவில் இருப்பதாக நீங்கள் கருதலாம். ஆனால், அது உண்மையில்லை. சமீபத்திய ஆய்வின்படி, 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் மெக்சிகோவின் பாஸ்போர்ட் பெற 231.05 டாலர் செலவாகும். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 225.78 டாலருடன் 2ஆவது இடம் பிடித்துள்ளது. மலிவான பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, 10 ஆண்டுகளுக்கான பாஸ்போர்ட் கட்டணம் 18.07 டாலர்தான்.
இந்தியாவின் உணர்வுகளோடு காங்கிரஸ் விளையாடுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை தட்டிப்பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயன்றதாக அவர் கூறினார். மேலும், காங்கிரஸ் பெண்களின் செல்வத்தைக் கைப்பற்றி அதை ரோஹிங்கியாக்கள், ஊடுருவல்காரர்களிடையே விநியோகிக்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 800 சிக்ஸர்களுக்கும் அதிகமாக விளாசி கிரிக்கெட் வீரர்கள் அசத்தியுள்ளனர். மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் சிக்ஸர் மழையாகப் பொழிகின்றன. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைவான லீக் போட்டிகளில் 800 சிக்ஸர்களை கடந்த சீசன் என்ற பெருமையை 2024 ஐபிஎல் சீசன் பெற்றுள்ளது.
தன்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா? என ராகுலுக்குப் பியூஷ் கோயல் சவால் விடுத்துள்ளார். அமேதியில் தோல்வி அடைந்த ராகுல் தற்போது வயநாடு சென்றுள்ளார். அவருக்கு அங்கும் தோல்வியே கிடைக்கும் என்ற அவர், ராகுல் 4 முதல் 5 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் ஒரு தொகுதியில் வெல்ல முடியும் என்றார். 2019 தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல், அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
கோவாவில் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வரும் நசீர் கான் என்பவர், அவர்களைப் பார்க்க வீட்டிற்குச் சென்றபோது, 2 மகன்களும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவர் மனைவி மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், தினமும் ஒரு பேரிச்சை பழம் மட்டுமே சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 258 ரன்கள் இலக்கைத் துரத்தி ஆடிய MI 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. கடைசி வரை வெற்றிக்காக போராடிய திலக் வர்மா 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மும்பை 14 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.
கேரளாவில் பரவிவரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியால் தமிழகத்தில் முட்டை விலை குறைந்துள்ளது. நாமக்கல் பண்ணைகளில் கடந்த வாரம் 5 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 40 காசுகள் குறைந்து ₹4.60ஆக உள்ளது. இதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ள நிலையில், வரும் நாட்களில் நிலைமையைப் பொறுத்து முட்டை விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சினிமாவில் தொடக்க காலத்தில் பல்வேறு நிராகரிப்புகளைச் சந்தித்ததாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பல காரணங்களுக்காக திரையுலகில் நிராகரிப்பைப் பார்த்திருப்பதாகக் கூறிய அவர், யாரோ ஒருவரின் காதலி நடிப்பதற்காக தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நிராகரிப்பை முழுமையாக உணர வேண்டும். அப்போதுதான் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது குறித்து முழுமையான தெளிவு கிடைக்கும் என்றார்.
கர்நாடகாவில் 3ஆம் கட்டத் தேர்தல் நடக்கவுள்ள 14 தொகுதிகளுக்கு 13 அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நியமித்துள்ளார். ஏப்ரல் 26இல் 14 தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக வெற்றியை காங்கிரஸ் முக்கியமாக பார்க்கும் நிலையில், முக்கிய அமைச்சர்களைத் தொகுதிகளில் களம் இறக்கிவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.