News April 28, 2024

IPL: ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்

image

லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 7 Four, 5 Six என விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அதிக ரன் குவித்த வீரர் பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். மேலும், ஆரஞ்சு கேப்புக்கான தரவரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

News April 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 28, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
▶தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்
▶தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை: ஐபிஎஸ் குற்றச்சாட்டு
▶பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு மோடி அரசு வஞ்சனை செய்கிறது: ஆர்.எஸ்.பாரதி
▶தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
▶IPL: டெல்லி அணி வெற்றி

News April 28, 2024

70 கோடி மக்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர்

image

நாட்டில் 70 கோடி மக்கள் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளதாகக் கூறினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் கஷ்டம் அதிகரித்துள்ளதாக பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

News April 28, 2024

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள்

image

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இதை செய்ய முடியாதவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன், வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம். இதன் மூலம் உங்கள் பசி எண்ணம் குறைவதுடன், உடற்பயிற்சிக்கு தேவையான சக்தியையும் அது கொடுக்கிறது. மேலும், உடற்பயிற்சிக்கு முன், பால் பொருட்கள், சிட்ரஸ் பழங்கள், எண்ணெய் உணவுகள், அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

News April 28, 2024

முன்னாள் சிஇஓ-க்கு ரூ.92.1 கோடி தர விப்ரோ முடிவு

image

விப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த தியரி டெலபோர்ட் கடந்த 6ஆம் தேதி பணியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவருக்கு நிபந்தனையுடன் ரூ.92.1 கோடி தர விப்ரோ முன் வந்துள்ளது. நிபந்தனையின்படி, அவர் அடுத்த ஓராண்டுக்கு வேறு எந்த வேலையிலும் சேரக் கூடாது. அதேபோல, ஆலோசனைப் பணிகளிலும் ஈடுபடக் கூடாது. போட்டி நிறுவனத்தில் சேராமல் இருப்பதற்காக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

News April 28, 2024

கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் மறு வாக்குப்பதிவு

image

கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் தொகுதியில் மட்டும் ஏப்ரல் 29ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நேற்று (ஏப்.26) நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவின்போது, சாம்ராஜ் நகர் தொகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதம் அடைந்தது. இதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் மறு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

சக்கரையை கட்டுக்குள் வைக்க…

image

*தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு சின்ன வெங்காயத்தைப் பச்சையாகத் தின்ற பின் தண்ணீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். *குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலைச்சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம். *வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.

News April 27, 2024

IPL: ராஜஸ்தான் அணி வெற்றி

image

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார பெற்றுள்ளது. 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RR அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் (71*), துருவ் ஜுரெல் (52*) ஆகியோர் அரைசதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இது, நடப்பு ஐபிஎல் தொடரில் RR அணிக்கு கிடைக்கும் 8ஆவது வெற்றியாகும்.

News April 27, 2024

ஏலியன் இருப்பது உறுதியானது?

image

பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சிவப்புக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தில், உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட 2.6 மடங்கு பெரிதான K2-18b கடல்கள் சூழ அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் வளிமண்டலத்தில் உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு இருப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!