India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் நடந்த முந்தைய போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் சொந்த மண்ணில் பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும், லக்னோவுக்கு எதிரான 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த CSK அணி, புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று (ஏப்.28) ஒரே நாளில் 20,583 மெகாவாட் மின் தேவை பதிவாகியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இருந்த மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், அதிகப்படியான மின் நுகர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாகி கொண்டே செல்வதால், நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வெயில் தாங்க முடியாமல் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக பாலக்காடு, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததால், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தாமதமானதே இதற்கு காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
▶குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
▶அடுத்த 5 நாள்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
▶வறட்சி பாதித்த 22 மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
▶தமிழக மக்கள் மீது மோடி கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை: செல்வப்பெருந்தகை
▶தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
▶IPL: ராஜஸ்தான் அணி வெற்றி
RCB-GT இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்த RCB அணி, SRH அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. எஞ்சி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால், RCB அணி இன்று குஜராத்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
விடுதலை படத்தின் 2ஆம் பாகம் சிறப்பாக வந்துள்ளதாக நடிகர் சூரி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2ஆம் பாகத்தில் ‘வாத்தியார்’ கதாபாத்திரத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும், முதல் பாகத்தைக் காட்டிலும் 2ஆம் பாகம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அவர் உறுதியளித்தார்.
மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி வரை (5 நாள்கள்) டிரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பிரதீப் அறிவித்துள்ளார்.
▶ஏப்ரல் – 28, சித்திரை – 15
▶கிழமை – ஞாயிறு
▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM, 3:30 PM – 4:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM, 1:30 PM – 2:30 PM
▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM
▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM
▶குளிகை நேரம்: 3:00 PM – 4:30 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: பஞ்சமி
▶நட்சத்திரம்: 4:49 AM வரை மூலம் பிறகு பூராடம்
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 42.4 டிகிரி வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு-42.4, திருப்பத்தூர்-41.8, தருமபுரி-41, சேலம்-41.9, கரூர்-40.5, வேலூர்-40.2, நாமக்கல்-40, திருச்சி-39.7, மதுரை-39.2, கோவை-39.1, தஞ்சை-39 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவதால், மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாகவும், அவற்றில் சுமார் 20 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. அந்த நகரங்களில் உள்ள அனல் மின் நிலையங்களை இலக்காக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 4 அனல் மின் நிலையங்கள் கடும் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.