News April 28, 2024

கஞ்சா போதையில் மிதக்கும் தமிழ்நாடு

image

கடந்த ஒரு வாரமாக தினம் ஒரு கஞ்சா போதை குற்றச்சம்பவம் செய்திகளில் வெளியாகின்றன. பேருந்துகளை மறிப்பது, பெற்றோருடன் சண்டையிடுவது, சாலையில் செல்வோரை வெட்டுவது என தேவையற்ற குற்றங்களை கஞ்சா போதை செய்ய வைக்கிறது. போதையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தச் செய்திகளை படிப்பதில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News April 28, 2024

சண்டே கிச்சன் டிப்ஸ்…

image

*பச்சை மிளகாயில் உள்ள காம்பை நீக்கி விட்டு அதை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள்களுக்குப் பிரெஷ்ஷாக இருக்கும். *பிரியாணி செய்யும்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும். *லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் சேர்த்து பிடித்தால் சுவையாக இருக்கும். *மோர்க் குழம்பு செய்யும்போது தேய்க்காய்க்கு பதிலாகக் கசகசாவை தேர்த்து அரைத்தால் கெட்டியாக வரும்.

News April 28, 2024

தமிழக மாணவர் தேர்ச்சி விகிதம் சரிவது எதனால்?

image

மூன்று ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகை பணிகளுக்காக UPSC நடத்திய தேர்வில் இந்தாண்டு தேர்வான 1,016 பேரில், தமிழக அளவில் 45 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம், ஐ.டி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் மோகமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

News April 28, 2024

கட்சிப் பதவியை பறிக்கும் முடிவில் இபிஎஸ்?

image

தேர்தலில் அதிமுகவின் செயல்பாடுகள் மீது எதிர்மறை கருத்துகள் வந்ததால், EX அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகளை நேரில் அழைத்து இபிஎஸ் கடுகடுத்துள்ளார். இதனால், எந்தெந்த தொகுதிகளில் பாசிடிவ், நெகடிவ் என்பதை ஆய்வு செய்து ரிப்போர்ட் தர, தனக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகளை பதவி நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 28, 2024

சிசிடிவி செயலிழப்புக்கு பொருந்தாத காரணம் கூறாதீர்

image

நீலகிரியில் நேற்று ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா அதிவெப்பம் காரணமாக 20 நிமிடங்கள் செயலிழந்தது. இதுதொடர்பாக பேசிய அத்தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், கேமரா செயலிழப்புக்கு பொருந்தாத காரணங்கள் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமராக்களில் தொழில்நுட்பக் கோளாறு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News April 28, 2024

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்!

image

பணியிடங்களில் தொழிலாளர்களுக்கான சுகாதாரம், பாதுகாப்பை வலியுறுத்தி 1989 ஆம் ஆண்டிலிருந்து ஏப். 28 அன்று உலக பணியிட பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு ‘பருவநிலை மாற்றத்தால் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற கருப்பொருளில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய குரல் கொடுப்போம்!

News April 28, 2024

முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் பணமழை

image

மார்ச் மாதத்துடன் 2023 – 24 நிதியாண்டு நிறைவடைந்த நிலையில், 4ஆவது காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அதில், பெரும்பாலான நிறுவனங்கள் ஈவுத்தொகையை (Dividend) அறிவித்துள்ளன. குறிப்பாக இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈவுத்தொகையை அறிவித்துள்ளன. இதனால், வரும் நாள்களில் முதலீட்டளர்களின் வங்கிக் கணக்கில் பண மழைதான்.

News April 28, 2024

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் என்னென்ன?

image

கோடை வெயில் கொளுத்தும் நிலையில், நீண்ட நேர சூரிய வெளிப்பாட்டினால் குழந்தைகள், பெரியவர்கள், வெளிப்புற அமைப்புகளில் பணிபுரிபவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. வேர்வையின்மை, வறண்ட சருமம், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, தலைவலி, இதய துடிப்பு அதிகரிப்பு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய, உடல் வெப்பநிலையை உடனே குறைக்க வேண்டும்.

News April 28, 2024

₹4 கோடி பறிமுதல் வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

image

தாம்பரத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடி-யிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர் . பிடிப்பட்ட ₹4 கோடி நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர். ஆனால், இதற்கு நயினார் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

News April 28, 2024

SRH அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா CSK?

image

CSK – SRH அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் போட்டி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. SRH அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதால், அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களுக்கு மேல் குவித்தால், CSK-க்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். ஆனால், சேப்பாக்கம் மைதானம் CSK அணிக்கு சாதமாக இருக்கிறது. இதனால், பந்துவீச்சில் கவனம் செலுத்தினால் போதும், எளிதில் வெற்றிபெற முடியும்.

error: Content is protected !!