News April 28, 2024

சிஎஸ்கே அணி புதிய சாதனை

image

நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் அடுத்தடுத்து 2 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சென்னை அணி சாதித்துள்ளது. 46வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட CSK, முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக ஆடிய வீரர்கள் 212/3 ரன்கள் குவித்தனர். இதற்கு முன் ஏப்.23இல் லக்னோ அணியை எதிர்கொண்ட CSK, 210/4 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஹோம் கிரவுண்டில் தொடர்ச்சியாக 2 முறை CSK அணி இரட்டை சதம் விளாசியுள்ளது.

News April 28, 2024

எலும்புகளை வலுவாக்க அற்புத பானம்

image

அருகம்புல்லில் 70% குளோரோஃபில் இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது. நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு அருகம்புல் சாறு மிகவும் பயன் தரக்கூடியது. மேலும், அருகம்புல் சாற்றில் கால்சியம், மக்னீசியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் வலுவடையும். அருகம்புல் சாறை தயாரித்த 15 நிமிடங்களுக்குள் பருகிவிட வேண்டும். ஏனென்றால் அதில் உள்ள சத்துக்கள் ஆக்சிஜனேற்றம் ஆகிவிடும்.

News April 28, 2024

212 ரன்கள் குவித்தது சிஎஸ்கே

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் 98, மிட்செல் 52, டூபே 38* தோனி 5* ரன்கள் குவித்தனர். SRH தரப்பில் புவனேஷ்வர் குமார், உனத்கட், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து SRH அணிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று CSK வெற்றிபெறுமா?

News April 28, 2024

மே 1 முதல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு

image

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் மே 1ஆம் தேதி சிலிண்டர் விலைக் குறையலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது காரணமாக கூறப்படுகிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹818.50 (14.2 KG), வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹1930ஆக உள்ளது.

News April 28, 2024

காங்கிரசுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை?

image

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுடன் கைகோர்த்து நிற்பதால் காங்., கூட்டணியில் இணையவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இவ்விரு கட்சிகளும் பாஜகவின் இரு கண்களாகத் திகழ்வதாகக் கூறிய அவர், INDIA கூட்டணிக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும் என்றார். மேற்கு வங்கத்தில் பாஜகவின் குரலாகவே இருவரும் பேசி வருகின்றனர் என விமர்சித்துள்ளார்.

News April 28, 2024

6 நாட்களுக்கு லேசான மழை பெய்யலாம்

image

மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் மே 1ஆம் தேதி வரை குமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மே 2 முதல் 4 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

அரை சதம் அடித்தார் மிட்செல்

image

SRH அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் CSK வீரர் மிட்செல் அரை சதம் அடித்துள்ளார். ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிவந்த அவர், தற்போது சரவெடியாக வெடித்துத் தள்ளி வருகிறார். மிட்செல் 51*, ருதுராஜ் 60* சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் CSK 13 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. CSK இதே வேகத்தில் சென்றால் எளிதாக 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 28, 2024

பூமியை நோக்கி வரும் ராட்சத பாறை

image

‘2022 TN122’ என்ற விண்கல், அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1,029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், நாளை மறுநாள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில் வந்து, பூமியிலிருந்து சுமார் 71.3 லட்சம் கி.மீ. தொலைவில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமி மீது மோத வாய்ப்பில்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை.

News April 28, 2024

அரை சதம் கடந்தார் ருதுராஜ்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிவரும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். இவரது அதிரடியால் CSK 9 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 9 ரன்னில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ருதுராஜ் 51*, மிட்செல் 20* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்று CSK எவ்வளவு ரன்கள் எடுக்கும் என நினைக்கிறீர்கள்?

News April 28, 2024

மோடி பொய் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்

image

மோடி கர்நாடகம் வரும் போதெல்லாம் பயங்கரமான பொய்களை பேசுவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களைத் தூண்டிவிட பிரதமர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என்று அவரால் மட்டுமே அபாண்ட பொய்களை கூற முடியும் என்றும் விமர்சித்தார். கர்நாடகாவில் மே 7இல் 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

error: Content is protected !!