News April 29, 2024

பாஜகவில் இணைந்தால் வழக்கு ரத்து? பிரதமர் விளக்கம்

image

பாஜகவில் இணைந்தவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அரசியல் கட்சித் தலைவர்களின் மீது வெறும் 3% வழக்குகளே உள்ளதாகவும், அதில் ஒருவரின் வழக்கு கூட கைவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். பாஜக, அமலாக்கத்துறை, சிபிஐயை வைத்து ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தார்.

News April 29, 2024

போதைப் பொருட்களின் மையம் ஆகிறதா குஜராத்?

image

குஜராத்தில் கடந்த 27ஆம் தேதி போதைப் பொருள் தயாரிக்கும் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. நேற்று, கடல் பகுதியில் ₹600 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக போதைப் பொருட்களைக் கடத்த, குஜராத் எளிய வழியாக இருக்கிறது. இந்தியாவிலேயே நீளமான கடற்பரப்பினை கொண்டிருக்கும் மாநிலம் குஜராத்தான். அங்கு எல்லை சோதனைகளை அதிகரிக்க கோரிக்கைகள் எழுகின்றன.

News April 29, 2024

வெள்ளரி மோர் சர்பத் செய்வது எப்படி?

image

வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கக் கூடியது வெள்ளரி. கோடையில் அதிகமாக கிடைக்கும் வெள்ளரியை கொண்டு ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். வெள்ளரிக்காய், இஞ்சி, கொத்தமல்லி, நெல்லி, கற்றாழை, பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதில் மோரை ஊற்றி, சில வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்தால் சுவையான வெள்ளரி மோர் சர்பத் ரெடி.

News April 29, 2024

மக்களை குழப்பும் பிரதமர்

image

மக்களை குழப்பும் வகையிலேயே பிரதமர் மோடியின் கருத்துக்கள் உள்ளதாக காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். பெண்களின் தாலியை இஸ்லாமியர்களுக்கு காங்., கொடுக்கும் என அபாண்டமான குற்றச்சாட்டை, கண்ணை மூடிக்கொண்டு பிரதமர் பேசுகிறார் என்று குற்றம் சாட்டிய அவர், இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவினர். அவர்கள் நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர் என சாடினார்.

News April 29, 2024

ஆசிய தடகளம்: பதக்க வேட்டையாடிய இந்தியா

image

U20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. துபாயில் நடந்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சார்பில் 63 வீரர்கள் அடங்கிய குழு பங்கேற்றது. மகளிர் 4×400 மீ., தொடர் ஓட்டம், ஆடவர் 4×400 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் 7 தங்கம் உட்பட 29 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். முதலிடத்தை சீனா (16 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கலம்) தட்டிச் சென்றது.

News April 29, 2024

நடனத்தின் தொன்மையை பரவலாக்குவோம்!

image

பழங்குடிகளின் கூத்து, பாலே உள்ளிட்ட அனைத்து வித நடனத்தின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக 1982 ஆம் ஆண்டிலிருந்து ஏப். 29 அன்று சர்வதேச நடன தினம் கொண்டாடப்படுகிறது. நடனக் கலைஞர் ஜீன் ஜார்ஜஸ் நோவர்ரேவை கௌரவிக்கும் விதமாக, நடனத்தின் தொன்மையைப் பரவலாக்க சர்வதேச தியேட்டர் நிறுவனமும், யுனெஸ்கோவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குகையில் தொடங்கிய ஆதி மனிதனின் ஆடல் மென்மேலும் செழிப்புரட்டும்.

News April 29, 2024

கெஜ்ரிவால் மனைவிக்கு அனுமதி மறுப்பு

image

திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். டெல்லி அமைச்சர் அதிஷி இன்றும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நாளையும் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கவுள்ளனர். ஒரே நேரத்தில் 2 பேர் சந்திக்க விதிகள் இருந்தும், சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

News April 29, 2024

ஓய்வெடுக்க கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்

image

கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 5 நாள்கள் ஓய்வெடுக்கிறார். முதல்வர் வருகையிலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

News April 29, 2024

நுரையீரலில் சிக்கிய மூக்குத்தியின் திருகாணி

image

கொல்கத்தாவில் பெண் ஒருவரின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தியின் திருகாணியை மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர். அந்தப் பெண் அணிந்திருந்த மூக்குத்தியின் திருகாணி கழன்ற நிலையில், அவர் மூச்சை இழுக்கும்போது நுரையீரலுக்குள் சிக்கிக் கொண்டது. மருத்துவமனைக்கு செல்லாமல் அலட்சியமாக இருந்த அந்தப் பெண், தொடர் இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைக்குப் பிறகு மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றுள்ளார்.

News April 29, 2024

ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி திடீர் பழுது

image

ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்றிரவு ஒரு சிசிடிவி பழுதானது. அங்கு 220க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், ஒரு கேமரா மட்டும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை செயலிழந்தது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜகோபால், IP முகவரியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பழுதானதாக விளக்கமளித்துள்ளார். ஏற்கெனவே, நீலகிரியில் சிசிடிவி செயலிழந்தது சர்ச்சையானது.

error: Content is protected !!