India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனடாவில் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு இடமளிக்கும் அரசியலை கனடா மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்துக் கிரகங்களும் அவ்வப்போது தங்களது இயக்கத்தை மாற்றுகின்றன. அந்த வகையில், விருச்சிக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்க உள்ளதால், மேஷம், சிம்மம், துலாம், விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பதவி உயர்வு, தடையில்லாப் பண வரவு, வீடு, நிலம் வாங்கும் யோகம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி என மேற்கண்ட ராசியினருக்குப் பல நன்மைகள் நடக்கும்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக விளக்கமளிக்கப் பிரதமர் மோடி ஒரு வாரமும், ராகுல்காந்தி 14 நாள்களும் கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர். மக்களின் சொத்துக்களை காங்கிரஸ், ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் எனப் பேசிய மோடி மற்றும் வடக்கு தெற்கு பிரிவினையை ராகுல் உருவாக்குவதாக புகார் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக இருவரும், ஏப்.29ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி வீரர் பில் சால்ட் அரைசதம் விளாசியுள்ளார். ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் விளையாடிய DC அணி 153/9 ரன்கள் எடுத்தது. 154 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசி 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
தென் தமிழகத்தில் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால், இரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும், தென்காசி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் மனநலம் பாதித்த 15 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 44 வயது நபருக்கு 106 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது தேவிக்குளம் விரைவு நீதிமன்றம். 2022ஆம் ஆண்டு திருச்சூரைச் சேர்ந்த குற்றவாளி அடிமாலிக்கு வேலைக்கு சென்றுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் வேலை செய்த அந்த நபர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை, ₹1,309.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதில், ₹179.91 கோடி பணமும், ₹1,083.78 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ₹8.65 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ₹1.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ₹35.8 கோடி மதிப்புள்ள இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவசரக் கால வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட், ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகளின் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
T20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி, நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர்கள் கொண்ட இந்த குழுவில் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஜூன் 2ஆம் தேதி அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெறும் இத்தொடருக்கான குழுக்களை, மே 1ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் வெளியிட வேண்டும். எனவே, இன்று நியூசிலாந்து அணி தங்கள் 15 பேர் கொண்ட குழுவை அறிவித்தது.
மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரஸ் கட்சின் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், உங்களின் உரிமை மற்றும் இட ஒதுக்கீட்டை காக்க தான் எந்த உச்சத்திற்கும் செல்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.