News April 30, 2024

NET தேர்வு ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம்

image

சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக, UGC – NET தேர்வு வரும் ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வரும் ஜூன் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில், கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான UGC – NET தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், NET தேர்வு மாற்றப்பட்டுள்ளது.

News April 30, 2024

அதிரடி சோதனை நடத்தப்பட வேண்டும்

image

போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று SDPI வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், கஞ்சா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதற்காக மாவட்ட அளவில் தனிப்படைகள் அமைத்து எங்கெல்லாம் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிரடி சோதனை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

IPL: லக்னோ அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்

image

லக்னோ அணியின் நட்சத்திர பவுலர் மயங்க் யாதவ், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 156.7கி.மீ வேகத்தில் பந்துவீசும் அவர், நடப்பு ஐபிஎல் தொடரின் அதிவேகமாக பந்துவீசும் பவுலராக அறியப்படுகிறார். ஏப்.7ஆம் தேதி நடந்த GT-க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அடுத்து நடந்த 5 போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது பூரணமாக குணமடைந்த அவர், MI-க்கு எதிரான நாளைய போட்டியில் பங்கேற்க உள்ளார்.

News April 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 30, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶பாஜகவில் இணைந்தவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை: பிரதமர் மோடி
▶செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
▶INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார்: அமித் ஷா
▶முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு
▶தலைநகரை கொலைநகராக மாற்றி விடாதீர்கள்: டிடிவி தினகரன்
▶தேர்தல் நேரத்தில் சி.ஏ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: வைகோ

News April 30, 2024

பதஞ்சலி தொடர்புடைய தொழிற்சாலைகள் உரிமம் ரத்து

image

யோகா குரு ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமத்தை உத்தராகண்ட் அரசு ரத்து செய்துள்ளது. கொரோனாவுக்கான முதல் மருந்து என பொய்யான விளம்பரம் செய்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து அடுத்து நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியது. இந்த வழக்கு நாளை (ஏப்ரல் 30) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

News April 30, 2024

இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

image

இரவில் சரியாக தூங்காமல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு மாரடைப்பு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். மொபைல்போனில் இருந்து வரும் வெளிச்சம், மெலாட்டோனின் என்ற ஹார்மோனை மூளையில் சரியாக சுரக்க விடாமல் தடுக்கும். இதனால் உங்களுக்கு தூக்கமின்மை ஏற்படும். இதை தொடர்ந்து செய்தால், ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

News April 30, 2024

குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்த அறிகுறி இல்லை

image

புதுக்கோட்டை சங்கம்விடுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லையெனத் திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், ‘தண்ணீரில் ஈகோலி என்ற பாக்டீரியா இல்லாததால், அதில் எந்தக் கழிவும் கலக்கப்படவில்லை. தண்ணீர்த் தொட்டி நீண்ட நாள் கழுவப்படாததால் சேர்ந்த பாசியைச் சிலர் தவறாகக் கூறியுள்ளனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.

News April 29, 2024

குங்குமப்பூவும் குழந்தை நிறமும்!

image

கர்ப்பக்காலத்தில் பாலில் குங்குமப்பூ கலந்து குடித்தால் குழந்தை நிறமாகப் பிறக்கும் என்ற நம்பிக்கை தொடர்கிறது. ஆனால் அறிவியல்பூர்வமாக இது உண்மையில்லை. கர்ப்பக்காலத்தில் குங்குமப்பூ பயன்படுத்திய கர்ப்பிணிகள் எல்லோருக்கும் குழந்தையின் நிற விஷயத்தில் பலன் கிடைத்ததாகவும் தகவல் கிடையாது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் பாலில் கலந்து குடிக்கலாம். இதை அதிகமாகப் பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

News April 29, 2024

கொல்கத்தா அணி அபார வெற்றி

image

டெல்லி அணிக்கு எதிரான IPL போட்டியில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. ஈடன் கார்டனில் முதலில் விளையாடிய DC 153/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்தீப் 35 ரன்கள் எடுத்தார். KKR தரப்பில் வருண் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய KKR அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார். DC தரப்பில் அக்‌ஷர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

error: Content is protected !!