News April 30, 2024

தாம்பரம் நாராயணன் திமுகவில் இருந்து விலகல்

image

செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், காஞ்சிபுரம் மாவட்ட திமுக அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2021இல் அமமுகவில் இருந்து விலகிய இவர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும் அழைத்து வந்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில், கட்சியில் இணைந்து 3 ஆண்டுகளாகியும் தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி அவர் விலகியுள்ளார்.

News April 30, 2024

ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து காதலர் பதில்

image

நடிகை ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து, அவருடைய முன்னாள் காதலர் சாந்தனு மெளனம் கலைத்து பேசியிருக்கிறார். சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்று, சாந்தனுவிடம் ஸ்ருதியுடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “மன்னித்து விடுங்கள், இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்” என்று அந்த கேள்வியைத் தவிர்த்திருக்கிறார். இதனால் இருவருக்கும் பிரேக்கப் ஆனது உறுதியாகியுள்ளது.

News April 30, 2024

மணிப்பூரில் இன்று மறுவாக்குப்பதிவு

image

மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, சில வாக்குச்சாவடிகளில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தினர். அதனால், உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங், ஓயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

News April 30, 2024

பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார்

image

பெண்களின் தாலியை காங்கிரஸ் பறித்துக் கொள்ளும் என்று பிரதமர் மோடி பொய் பேசுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பல்கலைக்கழகம், ESI மருத்துவமனை, ஜவுளி பூங்கா, ரயில்வே பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்றும், இதில் ஒன்றையாவது மோடி அரசு செய்திருக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 30, 2024

NET தேர்வு ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம்

image

சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக, UGC – NET தேர்வு வரும் ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, வரும் ஜூன் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில், கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான UGC – NET தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், NET தேர்வு மாற்றப்பட்டுள்ளது.

News April 30, 2024

மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்

image

DC-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், KKR வீரர் சுனில் நரைன் புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார். 1. சுனில் நரேன்- 69* (ஈடன் கார்டன்ஸ்), 2. லசித் மலிங்கா- 68 (வான்கடே), 3. அமித் மிஸ்ரா- 58 (பெரோசா).

News April 30, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
▶முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார்
▶காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்யாமல் வசூல் செய்து வருகிறது: பிரதமர் மோடி
▶ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசு அமைதி காக்கிறது: அன்புமணி
▶ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
▶IPL: கொல்கத்தா அணி வெற்றி

News April 30, 2024

IPL: மும்பை-லக்னோ அணிகள் இன்று மோதல்

image

மும்பை-லக்னோ இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில், MI- 9, LSG- 5ஆவது இடங்களில் உள்ளன. கடைசி 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி, இனி வரும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். பலம் வாய்ந்த லக்னோ அணியுடன் மோதவுள்ளதால், போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும்.

News April 30, 2024

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் சிம்ரன், மீனா?

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில், நடிகைகள் சிம்ரன் மற்றும் மீனா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித்துக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பை மே மாதம் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது.

News April 30, 2024

பறவை காய்ச்சல்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

image

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொற்று, கோழிகள், மற்ற பறவைகளின் கழிவுகளில் இருந்தும் மனிதா்களுக்கு எளிதில் பரவும். காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். தனிநபா் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல், முகக்கவசம் அணியவும் பொது சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!