News May 2, 2024

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிக தண்ணீர் இருக்கிறது

image

நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் இருப்பதாக இஸ்ரோ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து சில அடி ஆழத்தில் இருக்கும் பனிக்கட்டிகள், துருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகளை விட 5-8 மடங்கு பெரியளவில் உள்ளதாகவும், சந்திரயான் 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப் பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

News May 1, 2024

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி

image

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் CSK அணி தோல்வி அடைந்துள்ளது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. பேர்ஸ்டோ (46), ரோசோவ் (43) ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் அணி.

News May 1, 2024

தென்னிந்தியாவில் அதிக வெற்றி கிடைக்கும்

image

பாஜகவிற்கு தென்னிந்தியாவில் காங்கிரசை விட அதிக வெற்றி கிடைக்கும் என அமித் ஷா கூறியுள்ளார். கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வர, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள் என காங்., தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நாங்கள் அரசியலமைப்பை மாற்றவில்லை, நாட்டைத்தான் வலுப்படுத்தினோம் என்றார்.

News May 1, 2024

குரு பெயர்ச்சி: 12 ராசிகளுக்கான பலன்கள்

image

மேஷ ராசியில் இருந்த குரு பகவான் இன்று ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனால் குருவின் பார்வை அனைத்து ராசிக்காரர்களுக்கும் அவரவர் நட்சத்திர பலன்களுக்கு ஏற்ப கிடைக்கும். குரு பெயர்ச்சியால் இன்றைய தினத்தில் இருந்து கிரக நிலைகள் மாறும் என்பதால் 12 ராசிகளுக்கு இன்ப, துன்பங்கள் அவரவர் பாத திசைக்கு தக்கப்படி நிகழும். கடகம், சிம்மம், கும்பம் உள்பட சில ராசிகளுக்கு குரு கோடி, கோடியாக கொடுக்க உள்ளார்.

News May 1, 2024

கூட்டணிக்காக திமுக அமைதி காக்கிறது

image

கூட்டணி அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக காவிரி விவகாரத்தில் திமுக அமைதி காப்பதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதல்வர், மற்றும் துணை முதல்வர் கூறுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது என்றார். இந்த விஷயத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசை வற்புறுத்துவதே இல்லை என சாடியுள்ளார்.

News May 1, 2024

உமா ரமணனின் இசைப் பயணம்

image

1980, 1990களில் மனதை மயக்கும் தனது குரலால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் உமா ரமணன். இவர் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏ.வி.ரமணனை காதலித்து 1976இல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். நீரோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய அவர், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

News May 1, 2024

நேரம் தவறும் புறநகர் ரயில்கள்; தவிக்கும் பயணிகள்

image

சென்னை- திருவள்ளூர், சென்னை-அரக்கோணம், சென்னை-திருத்தணி மார்க்கத்தில் ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை நம்பியே சென்னையில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான புறநகர் ரயில்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்றும், 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News May 1, 2024

மன அழுத்தம் போக்கும் இசை

image

இயந்திரமயமான இந்த காலத்தில் பணம் சம்பாதிக்க ஓய்வின்றி அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பொழுது போக்க போதிய நேரத்தை செலவிட முடிவதில்லை. இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, விடுபட முடியாமல் தவிக்கின்றனர். இது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மனதிற்கு பிடித்த இசை மற்றும் பாடலைக் கேட்கும் பட்சத்தில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

News May 1, 2024

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்

image

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு குழந்தைகள் வீட்டில் உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் அவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்று விடுவர். ஆதலால், இந்த ஒரு மாதத்தில் பெற்றோர், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். தொலைக்காட்சிகள், செல்ஃபோன்களில் நேரத்தை வீணடிக்காமல், தங்களது வாரிசுகளுடன் பொழுது போக்க வேண்டும். இதனால் பெற்றோர்- குழந்தைகள் இடையேயான அன்பு மேலும் அதிகரிக்கும்.

News May 1, 2024

இந்தியாவில் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன தெரியுமா?

image

மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில், தேர்தலில் பெரும்பான்மை பெரும் அரசியல் கட்சிகளே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அமைக்கின்றன. இதுபோல இந்தியாவில் 7 தேசிய கட்சிகளும், 57 பிராந்திய கட்சிகளும், 2,764 அங்கீகாரமில்லா கட்சிகளும் உள்ளதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. இந்த கட்சிகள்தான், தேர்தலில் கூட்டணி அமைத்தோ, தனித்துப் போட்டியிட்டோ வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.

error: Content is protected !!