News May 3, 2024

முட்டை விலை தொடர்ந்து உயர்வு

image

கடும் வெயிலின் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதலில் ஒரு முட்டையின் விலை ₹20 காசுகள் உயர்ந்து ₹4.80க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் முட்டை விலை ₹65 காசுகள் உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சில்லரை விற்பனை விலை உயர்ந்து, 1 முட்டை ₹6 – ₹7 வரை விற்பனையாகிறது.

News May 3, 2024

தென்தமிழக கடல்பகுதிகளில் நாளை கடல் கொந்தளிப்பு

image

தென்தமிழக கடல்பகுதிகளில் நாளை கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தேசிய கடல்சார் மற்றும் கடலியல் தேசிய மையம் எச்சரித்துள்ளது. கேரள கடற்பகுதி, தென்தமிழக கடலோர பகுதிகளில் நாளை காலை 2.30 மணி முதல் நாளை மறுநாள் இரவு 11.30 மணி வரை பலத்த காற்று வீசுமென்று தெரிவித்துள்ளது. கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரைகளில் படகுகள் மோதி சேதமடையும் நிலை வரலாம் என்றும் எச்சரித்துள்ளது.

News May 3, 2024

IPL: கொல்கத்தா அணி தடுமாற்றம்

image

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. துஷாரா வீசிய முதல் ஓவரிலேயே, சால்ட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, அவர் வீசிய இரண்டாவது ஓவரின் 2ஆவது பந்தில், ரகுவன்ஷியும்(13), கடைசிப் பந்தில் ஷ்ரேயஸ் ஐயரும் (6) ஆட்டமிழந்தனர். தற்போது, KKR 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது.

News May 3, 2024

அனுராக் தாக்கூரிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்

image

கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் வாழ்த்து பெற்றார். கனடாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், மிக இளம் வயதில் (17வயது) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றவர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். குகேஷ் சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

News May 3, 2024

காந்தி குறித்த பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு

image

காந்தி குறித்த குஜராத் முன்னாள் எம்எல்ஏ இந்திரனில் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பரப்புரையில் பேசிய அவர், “ராகுல் அடுத்த மகாத்மா காந்தியாக உருவெடுப்பார். காந்தி சற்று தந்திரக்காரராக இருந்தார். ஆனால், ராகுல் காந்தி முற்றிலும் வெளிப்படையானவர்” எனக் கூறியிருந்தார். இவரின் பேச்சை கண்டித்துள்ள பாஜக, காந்தியை அவமானப்படுத்திய காங்கிரஸை, மக்கள் தேர்தலில் தண்டிப்பார்கள் என்று கூறியுள்ளது.

News May 3, 2024

பாண்டியாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய ஸ்ரீசாந்த்

image

உலகக் கோப்பை டி20 அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வானதற்கு முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் பாண்டியாவுக்கு சிறப்பாக இல்லை என்ற அவர், பாண்டியா இந்தியாவுக்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்ததை மறக்க கூடாது என்றார். மேலும், சேசிங்கின் போது கோலி-பாண்டியா ஆட்டம் சிறப்பாக இருக்குமெனவும் தெரிவித்தார். பாண்டியா தேர்வு குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சித்திருந்தனர்.

News May 3, 2024

9 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை

image

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

News May 3, 2024

IPL: கொல்கத்தா அணி பேட்டிங்

image

கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, KKR அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் KKR 2ஆவது இடத்திலும், MI 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால், MI வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News May 3, 2024

ரேவண்ணா ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை

image

பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு எம்பி ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். மைசூர் கே.ஆர்.காவல் நிலையத்தில் ஒரு நபர், ரேவண்ணா அழைத்ததாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட தன் தாயைக் காணவில்லை என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, இன்று புதிதாக மேலும் ஒரு முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

News May 3, 2024

1000 தியேட்டரில் வெளியான ‘நடிகர்’ திரைப்படம்

image

பிரபல நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘நடிகர்’ திரைப்படம் 1000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது. ஜீன் லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், கவனம் ஈர்த்தது. சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து சூப்பர் ஸ்டாராகும் நடிகரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. டோவினோ தாமஸ் மாயநதி, மின்னல் முரளி, 2018, தள்ளுமலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

error: Content is protected !!