News May 4, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News May 4, 2024

IPL: பர்பிள் கேப்பை கைப்பற்றினார் பும்ரா

image

KKR-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், MI வீரர் பும்ரா அபாரமாக பந்துவீசியுள்ளார். நேற்றைய போட்டியில், 4 ஓவர்கள் வீசிய அவர் 18 ரன்கள் மட்டும் கொடுத்து வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். KKR அணி 10 விக்கெட்களை இழந்து 169 ரன்களுக்கு சுருண்டது. இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை (16 விக்கெட்டுகள்) வீழ்த்தியதற்கான பர்பிள் கேப்பை பெற்றார்.

News May 4, 2024

ராகுல் காந்திக்கு ரூ.20 கோடி சொத்து

image

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களையும் வழங்கியுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரூ.55,000 கையிருப்பாகவும், ரூ.26 லட்சத்து 25,157 வங்கியிலும், ரூ.49 லட்சத்து 79,184 கடன் இருப்பதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்.

News May 4, 2024

மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை

image

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவா்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தொடா்ந்து கற்போம் எனும் திட்டத்தின் கீழ், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் மூலம் இந்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவா்கள் துணைத் தோ்வில் தேர்ச்சி பெற்று தங்கள் கல்வியைத் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News May 4, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶உத்திர பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி
▶மே, ஜூனில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்
▶இந்தாண்டு 7030 புதிய பேருந்துகள் வாங்க தமிழக போக்குவரத்து கழகம் திட்டம்
▶நாம் தமிழர் கட்சி அறிவித்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
▶மின் பயன்பாட்டில் புதிய உச்சத்தை எட்டியது தமிழ்நாடு
▶விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

News May 4, 2024

ஒற்றை ஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்

image

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் ஒற்றை ஆளாக போராடியுள்ளார். மும்பை வீரர்கள் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, நெஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடி வந்தார். 6 Four, 2 Six என விளாசி அரைசதம் கடந்தார். பின்னர், ஆண்ரே ரஸல் வீசிய ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

News May 4, 2024

இலவச இதய பரிசோதனை வேண்டும்

image

கொரோனா தடுப்பூசி விஷயத்தில் நாட்டு மக்களின் வாழ்க்கையை பாஜக அபாயத்தில் தள்ளிவிட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். கொரோன தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் இலவசமாக இதய பரிசோதனை செய்ய வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்தார். மேலும், நாட்டில் எந்த மருத்துவமனையிலும், எப்போது வேண்டுமானாலும் மக்கள் பரிசோதனை செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

News May 4, 2024

APPLY NOW: ரயில்வேயில் 4,660 வேலைகள்

image

RPFல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும். <>https://www.rrbapply.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் மே 14 வரை விண்ணப்பிக்கலாம்.

News May 3, 2024

IPL: மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி

image

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, தொடக்கம் முதலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதனால், 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

error: Content is protected !!