News May 4, 2024

மதிமுகவை திமுகவில் இணைத்து விடுங்கள்

image

மதிமுகவை திமுகவில் இணைப்பதே தொண்டர்களுக்கு வைகோ செய்யக்கூடிய நன்மையாக இருக்கும் என முன்னாள் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். எஞ்சிய மதிமுக தொண்டர்களை வைகோ ஏமாற்ற முயலக் கூடாது என்ற அவர், வாரிசுக்காக கட்சி நடத்தினால் தோல்வி தான் கிடைக்கும் என்றார். மதிமுகவின் முக்கிய முகமாக இருந்த அவர், துரை வைகோ அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவில் இருந்து விலகினார்.

News May 4, 2024

கங்கனாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்

image

ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேருவை அவமதிக்கும் வகையில் பேசியதாக கங்கனா ரணாவத் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளர் கங்கனா, மோதிலால் நேரு வாழ்ந்தபோது, அவர்தான் அம்பானி, ஆங்கிலேயருடன் அவர் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

INDIA கூட்டணிக்கு கிடைத்த வெற்றி

image

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டிருப்பது INDIA கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பல மாத அழுத்தத்திற்கு பிறகு, மோடி அரசு வெங்காய ஏற்றுமதி மீதான தடையை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க, கடந்த டிசம்பர் மாதம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இன்று அந்த தடை நீக்கப்பட்டது.

News May 4, 2024

பெங்களூரு அணி வெற்றி

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய GT அணி, 147 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. தெவாட்டியா 35, மில்லர் 30 ரன்கள் எடுத்தனர். RCB தரப்பில் சிராஜ், தயாள் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய RCB அணி, 152/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டூபிளெஸிஸ் 64, கோலி 42 ரன்கள் எடுத்தனர். GT தரப்பில் லிட்டில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

News May 4, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – கவனம் தேவை
*ரிஷபம் – வாய்ப்பு கிடைக்கும்
*மிதுனம் – முன்னேற்றம் ஏற்படும்
*கடகம் – அமைதியாக இருக்க வேண்டும்
*சிம்மம் – முக்கிய முடிவு எடுக்க வேண்டாம்
*கன்னி – தன்நம்பிக்கை அதிகரிக்கும்
*துலாம் – அனைத்திலும் வெற்றி
*விருச்சிகம் – சுயமாக செயல்படும் நாள்
*தனுசு – உணர்ச்சிவசப்படக் கூடாது
*மகரம் – வளர்ச்சிக்கு ஏற்ற நாள் *கும்பம் – மகிழ்ச்சி அதிகரிக்கும் *மீனம் – நம்பிக்கை இழக்கக் கூடாது

News May 4, 2024

தோல்வி பயத்தில் அவதூறு பரப்புகிறார்கள்

image

தோல்வி பயத்தில் பாஜக பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் செய்த வளர்ச்சியை பற்றி பேசாமல், மக்களை பயமுறுத்தும் வெறுப்பு பேச்சுகளை பாஜக பேசி வருவதாக தெரிவித்த அவர், பாஜக ஆட்சியில் நாடு பல துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பாஜகவின் அவதூறுகளை புறந்தள்ளி, தேர்தலில் பாஜகவுக்கு சரியான தண்டனையை மக்கள் வழங்குவார்கள் என்றார்.

News May 4, 2024

17 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது. இதனால், நாளை ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை, கரூரில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, குமரி உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 4, 2024

கூட்டு பாலியல், கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு

image

ஹரியானா மாநிலம் நூவா கூட்டு பாலியல் வன்கொடுமை, இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016இல் சிறுமி உள்ளிட்ட 2 பெண்கள் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் கணவர், மனைவி உயிரிழந்த நிலையில், சிபிஐ விசாரித்து 4 பேரை கைது செய்தது. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News May 4, 2024

IPL: 18 பந்துகளில் அரை சதம் விளாசிய டூ பிளசிஸ்

image

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் டூ பிளசிஸ் 18 பந்துகளில் அரை சதம் விளாசினார். 148 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி அணி ஆட்டத்தை தொடங்கியது. கோலியும், டூ பிளசிஸ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி பட்டையை கிளப்பினர். குறிப்பாக, டூ பிளசிஸ் வெளுத்து கட்டினார். 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விரட்டிய அவர், 23 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார்.

News May 4, 2024

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சலுகை

image

2019இல் 11,12ஆம் வகுப்புகளில் கணித பாடத்தை பேசிக், ஸ்டாண்டர்ட் என 2ஆக சிபிஎஸ்இ பிரித்தது. 10ஆம் வகுப்பில் பேசிக் கணிதம் படித்தோருக்கு 11ஆம் வகுப்பில் ஸ்டாண்டர்ட் கணிதம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படாது. ஆனால், கொரோனா காலத்தில் ஸ்டாண்டர்ட் கணிதம் தேர்வு செய்ய சலுகை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 2023-24இல் பேசிக் கணிதம் படித்தோருக்கு, ஸ்டாண்டர்ட் கணிதத்தை தேர்வு செய்ய மீண்டும் சலுகை அளித்துள்ளது.

error: Content is protected !!