News April 10, 2024

மக்களவையில் கவுண்டிங் தொடங்குமா தேமுதிக?

image

2005இல் தொடங்கப்பட்ட தேமுதிக, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த அக்கட்சி, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 29 தொகுதிகளில் வென்றது. பிறகு நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியே கிடைத்தது. இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, வெற்றி பாதைக்கு திரும்புமா என பொறுத்திருந்து காண்போம்.

News April 10, 2024

தேர்தல் செலவுக்கு ₹200 கோடி ஹவாலா பணம்

image

தேர்தலையொட்டி, ₹200 கோடி ஹவாலா பணத்தை துபாயிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவர திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. மலேசியாவிலிருந்து இருந்து நாடு கடத்தப்பட்ட ஹவாலா ஏஜென்ட் வினோத்குமார் என்பவரிடம் நடந்த விசாரணையில், அவர் தமிழகத்தில் அப்பு என்பவரிடம் ₹200 கோடி ஹவாலா பணத்தை கொண்டு வருவது குறித்து பேசியது தெரியவந்தது. தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிக்கு இப்பணத்தை வழங்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

News April 10, 2024

BREAKING: இடியுடன் மழை பெய்யும் மக்களே

image

கடந்த 2 வாரமாக வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், பிற்பகல் நேரத்தில் வெளியே வரமுடியாததால் மழை பெய்யாதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு, மக்களின் மனதை குளிர வைத்துள்ளது. இதனால், வெப்பம் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 10, 2024

குறைந்த மக்களவைத் தொகுதி கொண்ட மாநிலங்கள் (1)

image

நாடு முழுவதும் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஒற்றை இலக்க மக்களவைத் தொகுதிகளை கொண்டுள்ளன. குறிப்பாக, 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு மக்களவைத் தொகுதியே உள்ளன. மிசோரம், நாகாலாந்து, சிக்கிமில் தலா ஒரு தொகுதி மட்டுமே உள்ளது. அதேபோல் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர், சண்டிகர், லடாக், லச்சத்தீவு, புதுச்சேரி ஆகியவற்றிலும் தலா ஒரு மக்களவைத் தொகுதியே உள்ளன.

News April 10, 2024

குறைந்த மக்களவைத் தொகுதி கொண்ட மாநிலங்கள் (2)

image

நாடு முழுவதும் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 2 மக்களவைத் தொகுதிகளே உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் தலா 2 மக்களவைத் தொகுதிகளே இருக்கின்றன. அதேபோல், கோவா மற்றும் தாதர் நாகர்ஹவேலி டாமன் டையூ ஆகியவற்றிலும் தலா 2 தொகுதிகளே உள்ளன. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

News April 10, 2024

குறைந்த மக்களவைத் தொகுதி கொண்ட மாநிலங்கள் (3)

image

உத்தராகண்ட் மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மக்களவையில் உள்ள இடங்கள் எண்ணிக்கையானது, சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 10, 2024

IPL: கடைசி வரை போராடிய ஷஷாங்க் சிங்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, ஷஷாங்க் சிங் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 6 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய அவர், 46*(25) ரன்கள் குவித்து அசத்தினார். ஐபிஎல் ஏலத்தில் தெரியாமல் வாங்கப்பட்ட இவர், அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

News April 10, 2024

முதல் படத்துக்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

image

களத்தூர் கண்ணம்மா மூலம் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமானார். இதையடுத்து மேலும் 5 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் அறிமுக படமான களத்தூர் கண்ணம்மாவில் அவர், ₹500 சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டி சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதும் வழங்கப்பட்டது. தற்போது கமல், ஒரு படத்துக்கு ₹150 கோடி வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.

News April 10, 2024

உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு

image

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். கைதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

News April 10, 2024

NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மே 5ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, மாா்ச் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார், மொபைல் எண்ணில் சிக்கல் இருப்பதாக தெரிவித்ததால், நேற்றும் இன்றும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இன்றிரவு 11.50 மணிக்குள் <>exams.nta.ac.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!