India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவில் இருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி, அக்கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில், நாதக கிருஷ்ணகிரி வேட்பாளராக வித்யாராணி அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது தாய் முத்துலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் உள்ளார். அக்கட்சி திமுக கூட்டணியில் இருப்பதால் மகளுக்கு ஆதரவு கேட்காமல், திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
▶மும்பை – 80 போட்டிகளில் 49இல் வெற்றி
▶சென்னை – 67 போட்டிகளில் 48இல் வெற்றி
▶கொல்கத்தா – 82 போட்டிகளில் 48இல் வெற்றி
▶பெங்களூரு – 87 போட்டிகளில் 40இல் வெற்றி
▶ராஜஸ்தான் – 55 போட்டிகளில் 36இல் வெற்றி
▶டெல்லி – 77 போட்டிகளில் 32இல் வெற்றி
▶ஹைதராபாத் – 53 போட்டிகளில் 32இல் வெற்றி
▶பஞ்சாப் – 61 போட்டிகளில் 31இல் வெற்றி
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக எந்த விசாரணைக்கும் ஆஜராக தயார் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மதுரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற அவர், அமலாக்கத்துறை விசாரணை நேர்மையாக நடப்பதாகவும், அழுத்தம் காரணமாக விசாரணை நடக்கிறதா? என்பது தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இறைவன் மிகப்பெரியவன் என்றும், தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையின் போது, சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று கத்திக்குத்து அளவிற்கு சென்றுள்ளது. திருச்சி, லால்குடியில் கட்சிக்கொடி கட்டிய பிரச்னையில் அதிமுக நிர்வாகிகளை திமுக நிர்வாகிகள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் சட்ட ஒழுங்கு பிரச்னை வருமோ என்று அச்சப்படும் அளவிற்கு இச்சம்பவம் பார்க்கப்படுகிறது.
38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, 20,000ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தில் 75,000 புள்ளிகளை கடந்து 75,124ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 50,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 5ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா டிரா செய்துள்ளார். ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சிக்கு எதிரான இப்போட்டியில், அவர் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி டிராவில் முடிந்ததால், இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. மேலும், ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான மற்றொரு போட்டியில், விதித் குஜராத்தி டிரா செய்தார்.
பங்குச்சந்தை புதிய உச்சத்தை நோக்கி வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரித்து 74,931 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 68 புள்ளிகள் அதிகரித்து 22,713 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. Indian Oil Corp, TVS உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
370 தொகுதிகளில் பாஜக வெல்லும் என மோடி, எதை வைத்து கூறுகிறார் என விவாதம் எழுந்துள்ளது. 3வது முறையாக அவர் தலைமையில் மீண்டும் பாஜக போட்டியிடுகிறது. பிரசாரம் தொடங்கியது முதல் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும், 370இல் பாஜக மட்டும் வெல்லும் என மோடி கூறி வருகிறார். எதை வைத்து அவர் இவ்வாறு கூறுகிறார்? 370 தொகுதிகளில் வென்றால் என்ன அதிகாரம் கிடைக்கும் என விவாதம் எழுந்துள்ளது.
வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது. ஒரு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம், பெயர் மட்டுமே பொருத்த முடியும். இதனால், அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.18ம் தேதி மாலை அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் வகையில் இப்பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து, மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,705க்கும் விற்பனையாகிறது. கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.89க்கும், கிலோ வெள்ளி ரூ.89,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் தங்கம் விலை ரூ.2000, வெள்ளி விலை ரூ.7.40 உயர்ந்துள்ளன.
Sorry, no posts matched your criteria.