India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டு பெண்கள் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிகிறது. சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக, கலாசார காரணங்களுக்காக சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் 50 ஆண்டுகால ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். வேலூரில் பேசிய அவர், திமுக சார்பில் போட்டியிட குடும்ப பின்னணி, ஊழல், தமிழ் கலாசாரத்திற்கு எதிரான மனநிலை ஆகிய 3 தகுதிகள் தேவை என்றும், திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாத நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், திமுகவின் குறிக்கோளே பிரித்தாளும் சூழ்ச்சிதான் என அவர் சாடினார்.
திருமணத்தை ரகசியமாக வைக்க நினைத்ததில்லை என நடிகை டாப்சி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “என் திருமணம் குறித்து தெரிவிப்பதற்கு, மனதளவில் தயாராக இல்லை. என் சகோதரி தான் திருமண ஏற்பாட்டை செய்தார். திருமணம் பற்றி எந்த கோரிக்கையையும் அவரிடம் கூறவில்லை. அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். திருமணத்திற்கு குறைவானவர்களே வந்ததால், எந்த விதமான அழுத்தமும் ஏற்படவில்லை” எனக் கூறினார்.
எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்ஜிஆர் மாத சம்பளம் கொடுத்து வந்தார். பிறகு எம்ஜிஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன். அதில் எம்ஜிஆரை வைத்து தெய்வத்தாய், இதயக்கனி உள்பட 6 வெற்றிப் படங்களை இயக்கினார். இதனால் சில சமயங்களில் ஆர்.எம்.வீரப்பனை எம்ஜிஆர், “சொல்லுங்க முதலாளி” என ஜாலியாக கிண்டல் செய்வது உண்டு.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் நாட்டிலேயே அதிமுக 2வது இடத்தில் உள்ளது. கமல்நாத் மகன் நகுல்நாத் (₹717 கோடி), அதிமுகவின் அசோக் குமார் (₹662 கோடி), இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தேவநாதன் (₹304 கோடி) முதல் 3 இடங்களில் உள்ளனர். ஏ.சி. சண்முகம் (₹152 கோடி), அதிமுக ஜெயபிரகாஷ் (₹135 கோடி) 6, 7ஆவது இடம், கார்த்தி சிதம்பரம் (₹96 கோடி ) 10ஆவது இடம் வகிக்கின்றனர்.
தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகியுள்ளதால்
‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என மக்கள் முழக்கம் எழுப்புவதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். வேலூரில் பேசிய அவர், 2014க்கு முன்பு மிகவும் பலவீனமான நாடாக இந்தியாவை உலக நாடுகள் கருதியதாகவும், ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வளமான இந்தியாவிற்கு பாஜக அடித்தளமிட்டுள்ளதாகவும் கூறினார். வளர்ந்த இந்தியாவை தமிழகம் வழிநடத்தும் நேரம் இது என அவர் தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 54 மண்டலங்களுடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆயத்த ஆடைகள், தோல்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், முந்திரி பருப்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் 2ஆவது, பழங்கள் – காய்கறி ஏற்றுமதியில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினசரி வசூலாகும் தொகையை தேர்தல் செலவுக்காக திமுக பயன்படுத்துவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. திமுக நிர்வாகிகள் மூலம் டாஸ்மாக் பணத்தை தேர்தலுக்கு செலவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், டாஸ்மாக் கடைகளில் தினசரி வசூலாகும் பணம் குறித்து தேர்தல் அதிகாரி கண்காணிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
சோதனையின்போது அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இது குறித்து மதுரையில் நடந்த சிறப்பு தொழுகைக்கு பின் பேசிய அவர், அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். ஆனால், என்ன எடுத்தார்கள் என அவர்கள்தான் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தாெடுக்க முடியாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர், விவாகரத்தான 6 மாதத்துக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.