India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரியில் 10,000 வாக்காளர்களை பட்டியலில் காணவில்லை. ஊட்டி சட்டபேரவை தொகுதி- 94,256, குன்னூர் சட்டபேரவை தொகுதி- 91,614, கூடலூர் சட்டபேரவை தொகுதி- 1,87,754 வாக்காளர்கள் இருந்தனர். இதில் ஊட்டியில் 6,500, குன்னூரில் 2,500, கூடலூரில் 1,000 பேர் என மொத்தம் 10,000 வாக்காளர்களை பட்டியலில் காணவில்லை. வேலைவாய்ப்பு இல்லாததால், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அவர்கள் பெயர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இபிஎஸ் மீது அடுக்கடுக்கான புகார் தெரிவித்து, கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் யாரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவது எனத் தெரியாமல் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே இபிஎஸ் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டி, அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
ஏர்டெல் உரிமையாளர் சுனில் பார்தி மிடெலுக்கு ₹74,064 கோடி சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவரின் மகளான இய்சா பார்தி பரிஷா, லண்டன் வாழ் இந்திய தொழிலதிபரான சரண் பரிஷாவை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார். சுனில் பார்தி அறக்கட்டளை உறுப்பினராக இருக்கும் இய்சா, அழகு சாதன நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை 29,000 பேர் தொடர்கின்றனர்.
கிரகணத்தின்போது விலங்குகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிதானமான விலங்காக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல கிரகணத்தின்போது திடுக்கிட்டு ஓட ஆரம்பித்துள்ளன. அதே போல, எப்போதும் சாதுவாக அமர்ந்திருக்கும் கலாபகோஸ் ராட்சத ஆமைகள் வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பதஞ்சலி விளம்பரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாபா ராம்தேவின் மன்னிப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் ஏற்க மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ், ஆச்சார்ய பாலகிருஷ்ணா இன்று ஆஜராகினர். அப்போது 2 பேரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகத் கூறப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், வேண்டுமென்று அவமதித்ததாக எடுத்து கொள்ளப்படுமென கூறினர். இதனால் ராம்தேவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 14,259 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 3 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 254 வேட்பாளர்கள் நேரடி வாக்குப்பதிவு மூலமும், 46 உறுப்பினர்கள் கட்சி ஆதரவுடனும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் ஆளும் மக்கள் சக்தி கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இருமுனைப் போட்டியில் உள்ளன.
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’ திரைப்படம், வரும் 19ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய இப்படம், கடந்த பிப்.16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் OTT-இல் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஹேம மாலினியை விமர்சித்த விவகாரத்தில் கார்கே, சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் (ECI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூட்டத்தில் பேசுகையில் ஹேம மாலினியை சுர்ஜேவாலா ஆபாசமாக விமர்சித்ததாக பாஜக புகார் அளித்தது. இதையடுத்து சுர்ஜேவாலுக்கு, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டும், இதுபோல காங்கிரசார் பேசாமல் இருப்பதை உறுதி செய்யும்படி கார்கேவுக்கும் ECI நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிர்வாக திறமையற்ற அரசாக திமுக அரசு செயல்படுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு சென்றுவிட்டதாகவும், அதனை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் பத்திரம் மூலம் எங்கிருந்து, எவ்வளவு பணம் பெற்றார்கள் என அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஜடேஜா, தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற தோனியின் சாதனையை ஜடேஜா சமன் செய்தார். இருவரும் தலா 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.