India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 12) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு அடிமட்ட தொண்டனால் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கும் அளவிற்கு வளர முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் EPS. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக சிதறிப் போகும் என்று பலரும் விமர்சித்த நிலையில், அதனை உடையாமல் கட்டிக் காத்து ஆளுமையை வெளிப்படுத்தி வரும் EPSக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
புத்தகத்தில் ‘பைபிள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை எதிர்த்த வழக்கில், நடிகை கரீனா கபூருக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிதி ஷா பீம்ஞானி என்பவருடன் இணைந்து அவர் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். ‘கரீனா கபூர் கானின் பிரெக்னன்சி பைபிள்’ என்ற பெயரில் அந்த புத்தகம் 2021ஆம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பிஜப்பூர் மாவட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 12 துப்பாக்கிகள், வெடிமருந்துகள், சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு பிரச்னையின்றி முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று பிளே-ஆஃப் சுற்றை நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை கொட்டி வருவதால், சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக மக்கள் நிம்மதி தெரிவிக்கின்றனர்.
மனிதர்களில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும், அதில் தாய்தான் விலை மதிப்பில்லாத உறவாக கருதப்படுகிறது. காரணம், தன்நலன் கருதாது வாழும் பெண் தெய்வங்களே அன்னை ஆவர். அத்தகைய பெருமைக்குரிய தாய்மையை சிறப்பிப்பதற்காக மே மாதத்தின் 2ஆவது ஞாயிற்றுக்கிழமையான இன்று, அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாய் வழி சமூகத்தைச் சேர்ந்தவர்களாகிய நாம், தன் உதிரத்தை உயிராக தந்த தாய்மையை எந்நாளும் கொண்டாடுவது அவசியம்.
ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் கொளுத்திய வெயில் தற்போது தணியத் தொடங்கியிருக்கிறது. கோடை மழை பெய்து வருவதால் நேற்று ஈரோட்டில் மட்டுமே வெயில் 40 டிகிரி சென்டிகிரேட்டை தொட்டது. வழக்கமாக அதிக வெப்பம் பதிவாகும் வேலூரில் 37.6 டிகிரி, கரூர் பரமத்தியில் 38.2 டிகிரி என வெப்பம் பதிவாகியிருந்தது. சென்னையில் அதிகபட்ச வெப்பம் 35 டிகிரி என்ற அளவில் மட்டுமே பதிவாகியிருந்தது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, எடியூரப்பா புகழ்ந்து பேசியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த சீனிவாச பிரசாத் எம்.பி. கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் சித்தராமையாவும், எடியூரப்பாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதில் பேசிய எடியூரப்பா, சித்தராமையாவை ‘ஜனபிரிய’ (மக்கள் நேசிக்கும்) முதல்வர் எனக் கூறி வியப்பை ஏற்படுத்தினார்.
நான்காம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (மே 13) நடைபெறவுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதோடு சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இன்று தோல்வியை தழுவினால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி, 10 புள்ளிகளுடன் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஆனால், தொடர் வெற்றிகளை RCB பதிவு செய்து வருவதால் இன்றும் கோலியின் ருத்ர தாண்டவம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.