News April 11, 2024

BREAKING: இன்று முதல் 16ஆம் தேதி வரை மழை

image

தமிழகத்தில் கடந்த 20 நாளுக்கு மேலாக வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், இன்று முதல் 16ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தென் மற்றும் வட தமிழகத்திலும், நாளை தென் தமிழகத்திலும் மிதமான மழை பெய்யும். ஏப்.13ஆம் தேதி தென், வட தமிழகத்தில் லேசான மழையும், 14 -16ஆம் தேதி வரை மிதமான மழையும் பெய்யும். இதனால், வெப்பம் சற்று தணிந்து, குளிர்ந்த காற்று வீச வாய்ப்புள்ளது.

News April 11, 2024

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு உதவ தயார்

image

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா உதவி செய்யத் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவிரவாத குழுக்கள், தற்போது அந்நாட்டிற்குள்ளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுகுறித்து பேட்டியளித்துள்ள ராஜ்நாத் சிங், தீவிரவாத குழுக்களை எதிர்கொள்ள முடியவில்லை என பாகிஸ்தான் கருதினால், இந்தியா உதவி செய்ய தயார் என்றார்.

News April 11, 2024

போருக்கு தயாராக இதுவே நேரம்

image

போருக்கு தயாராக வேண்டிய நிலை அதிகரித்து இருப்பதாக வடகாெரிய மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். தென்கொரியா, ஜப்பானுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், ராணுவ பல்கலைக்கழகத்தை கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். அப்போது அவர், சர்வதேச சூழ்நிலை, சுற்றியுள்ள நாடுகளில் நிலவும் ஸ்திரமின்மையை சுட்டிக்காட்டி, போருக்கு தயாராக இருக்க வேண்டிய நிலை உருவாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

News April 11, 2024

விஜய்யின் ‘G.O.A.T’ செப்.5ஆம் தேதி வெளியீடு

image

விஜய் நடிக்கும் ‘G.O.A.T.’ திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில், சினேகா, பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதை களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News April 11, 2024

பாஜகவில் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

image

ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிஜூ ஜனதா தள எம்எல்ஏக்கள் அரவிந்த தாளி, பிரேமானந்த நாயக் ஆகியோர், பாஜகவில் அண்மையில் சேர்ந்தனர். இதையடுத்து 2 பேருக்கு எதிராகவும், சபாநாயகரிடம் பிஜூ ஜனதா தளம் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் 2 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார்.

News April 11, 2024

NEET விண்ணப்பங்களில் திருத்தும் செய்யலாம்

image

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்களில் இன்றும், நாளையும் திருத்தம் மேற்கொள்ளலாம். மே 5ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்து. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் போன்றவற்றை <>neet.ntaonline.in<<>> என்ற இணையதளத்தில் திருத்திக் கொள்ளலாம். ஆதாரில் பிரச்னை உள்ளவர்கள், ஏப்.15ஆம் தேதி வரை திருத்தும் மேற்கொள்ளலாம்.

News April 11, 2024

பச்சை பொய் சொல்லும் பி.டி.ஆர்

image

தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக நிறுத்தியதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பச்சை பொய் சொல்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், ஆளும் திமுக அரசு 100% தோல்வி அடைந்து, மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறது. மடிக்கணினி, அம்மா கிளினிக் உள்பட அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்திவிட்டது என்றார்.

News April 11, 2024

சற்றுமுன்: பாஜக மாவட்ட செயலாளர் கைது

image

திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததால், மகுடீஸ்வரன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் இன்று சினிமா பட பாணியில் அதிரடியாக கைது செய்து, தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகின்றனர்.

News April 11, 2024

இந்த கேவலம் இங்கு தான் நடக்கிறது!

image

டாஸ்மாக் மதுப் பாட்டில்களைப் பாதுகாக்க குளிர்சாதன குடோன் அமைத்த அரசுக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட ஏன் மனம் வரவில்லை என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாமக்கலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அவர், குடிப்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறையை மதுப் பாட்டில்களை சேமித்து வைக்கும் குடோன்களைப் பாதுகாக்க நிறுத்தும் கேவலம் இங்கு தான் நடக்கிறது என்றார்.

News April 11, 2024

முருகதாஸ் இயக்கும் பட பெயரை வெளியிட்டார் சல்மான்

image

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ள பட பெயரை இந்தி நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள அவர், போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தாம் நடிப்பதாகவும், படத்தின் பெயர் சிக்கந்தர் என்றும், அந்த படம் 2025 ரமலான் பண்டிகையின்போது வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!